ADDED : ஆக 02, 2025 02:00 AM

பொதுவாக சிலருக்கு குடைமிளகாய் பிடிப்பது இல்லை. உணவில் ஒதுக்கி தள்ளுவர். குழம்பில் சேர்ப்பதற்கு பதில், குடைமிளகாய் 'பாத்' செய்து தாருங்கள். நிமிடத்தில் தட்டு காலியாகும். செய்வதும் எளிது .
செய்முறை முதலில் அடுப்பை பற்ற வைத்து, வாணலியை வைக்கவும். அதில் எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும், சீரகம், பெருங்காயம், கடுகு போடவும். பொரிந்ததும் கறிவேப்பிலை, மிளகாய் துண்டுகள் போட்டு வறுக்கவும். அதன்பின் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போடவும்.
பொன்னிறமானதும் மஞ்சள் துாள், இஞ்சி, பூண்டு விழுது போட்டுக் கிளறவும். நீளமாக நறுக்கிய குடமிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி, உப்பு போட்டு நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும். காய்கள் வெந்த பின் புளிய ரசம், வாங்கிபாத் துாள், மிளகாய் துாள் சேர்த்து கிளறவும்.
இதில் அரிசி சாதத்தை போட்டுக் கிளறவும். அதன்மீது பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழையை அலங்கரித்தால், சுவையான குடைமிளகாய் பாத் தயார்.
சூடாக பரிமாறவும். பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு மதிய உணவுக்கு கொடுத்து அனுப்பலாம். சுவையாக இருக்கும். மிச்சம் வைக்காமல் சாப்பிடுவர்
- நமது நிருபர் - .