/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'டெலிவரி பாய்ஸ்'களுக்கு 'லிப்ட்' தடை; 'மேக்னா புட்ஸ்' நிறுவனத்துக்கு கண்டனம்
/
'டெலிவரி பாய்ஸ்'களுக்கு 'லிப்ட்' தடை; 'மேக்னா புட்ஸ்' நிறுவனத்துக்கு கண்டனம்
'டெலிவரி பாய்ஸ்'களுக்கு 'லிப்ட்' தடை; 'மேக்னா புட்ஸ்' நிறுவனத்துக்கு கண்டனம்
'டெலிவரி பாய்ஸ்'களுக்கு 'லிப்ட்' தடை; 'மேக்னா புட்ஸ்' நிறுவனத்துக்கு கண்டனம்
ADDED : டிச 11, 2025 05:58 AM
பெங்களூரு: உணவு வினியோகிக்கும் ஸ்விக்கி, சொமோட்டோ டெலிவரி ஊழியர்களுக்கு லிப்ட் பயன்படுத்த தடைவிதித்த, ரெஸ்டாரென்ட் நிர்வாகத்தை, பலரும் கண்டித்துள்ளனர்.
பெங்களூரின் ஜெயநகர், ராஜாஜி நகர் உட்பட பல்வேறு இடங்களில் 'மேக்னா புட்ஸ்' ரெஸ்டாரென்ட் செயல்படுகிறது. இங்குள்ள ஒரு ரெஸ்டாரென்டில் ஸ்விக்கி, சொமோட்டோ நிறுவனங்களின் புட் டெலிவரி ஊழியர்கள், லிப்ட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
இது பற்றி லிப்ட் அருகே அறிவிப்பு ஒட்டப்பட்டது. அதில், 'புட் டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சொமோட்டோ ஊழியர்கள், லிப்டை பயன்படுத்தாதீர்கள். படிகளை பயன்படுத்துங்கள்' என கூறப்பட்டிருந்தது.
ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஒருவர், லிப்ட் அருகில் இந்த போஸ்டரை கவனித்தார். தன் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பலரும் ஹோட்டல் நிர்வாகத்தினரை வன்மையாக கண்டித்தனர்.
'மேக்னா புட்ஸ் ஹோட்டல், டெலிவரி ஊழியர்களை மோசமாக நடத்துகிறது. இப்படி நடந்து கொண்டால், ஹோட்டலுக்கு பூட்டு போடுவது உறுதி. மக்களை அவர்களின் தொழிலை வைத்து, அளந்து பார்ப்பது சரியான நடவடிக்கை அல்ல. மனித நேயத்துக்கு எதிரானது. மேக்னா புட்ஸ் மின் கட்டணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில், இது போன்று நடந்து கொள்கிறது' என கண்டித்தனர்.
அதன்பின் விழித்து கொண்ட ஹோட்டல் நிர்வாகம், லிப்ட் அருகே ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு போஸ்டரை அகற்றி, டெலிவரி ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இதுகுறித்து, அவர்களது இன்ஸ்டாகிராம் பதிவு:
பொதுவாக ஹோட்டலில், வாடிக்கையாளர் நெருக்கடி இருக்கும். இத்தகைய நேரத்தில், டெலிவரி ஊழியர்களும் லிப்டில் ஏறினால், வாடிக்கையாளர்களுக்கு பிரச்னை ஏற்படும் என்பதால், லிப்ட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இது தேவையற்ற கட்டுப்பாடு என்பது, எங்களுக்கு புரிந்தது. அறிவிப்பு போஸ்டர் ஒட்டியது தவறுதான்.
டெலிவரி ஊழியர்கள் நாள் முழுதும் உழைக்கின்றனர். அவர்கள் மீது, எங்களுக்கும் அக்கறை, மதிப்பு உள்ளது. தவறு செய்துவிட்டோம். அதை சரி செய்துள்ளோம், அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

