/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பஞ்சு மில்லில் தீ விபத்; து இயந்திரங்கள் நாசம்
/
பஞ்சு மில்லில் தீ விபத்; து இயந்திரங்கள் நாசம்
ADDED : டிச 11, 2025 05:58 AM
யாத்கிர்: பஞ்சு மில்லில் தீப்பிடித்ததில், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பஞ்சு தீக்கிரையானது. இயந்திரங்களும் தீயில் நாசமடைந்தன.
யாத்கிர் மாவட்டம், ஷஹாபுரா தாலுகாவின் சாத்யபுரா கிராமத்தில் வசிப்பவர் சாஹேல். இவர் கிராமத்தின் அருகில், 'ஸ்ரீ லட்சுமி பாலாஜி காட்டன் மில்' என்ற பெயரில், பஞ்சு மில் நடத்துகிறார்.
மில்லில் 60 டன்னுக்கும் மேற்பட்ட பஞ்சை, விற்பனைக்காக சேகரித்து வைத்திருந்தார்.
ஊழியர்கள் நேற்று காலை, பணியில் ஈடுபட்டிருந்த போது, மில்லில் திடீரென தீப்பிடித்தது. தீயை பார்த்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்தனர்.
பஞ்சு என்பதால் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் தீயை கட்டுப்படுத்தினர். ஊழியர்கள் வெளியே வந்துவிட்டதால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தில், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள பஞ்சு தீக்கிரையானது. இயந்திரங்களும் தீயில் நாசமடைந்தன. மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததாக தெரிய வந்துள்ளது.
ஷஹாபுரா ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

