sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பல் மருத்துவ மாணவி தற்கொலை கல்லுாரி முதல்வர், 6 பேர் மீது வழக்கு

/

 பல் மருத்துவ மாணவி தற்கொலை கல்லுாரி முதல்வர், 6 பேர் மீது வழக்கு

 பல் மருத்துவ மாணவி தற்கொலை கல்லுாரி முதல்வர், 6 பேர் மீது வழக்கு

 பல் மருத்துவ மாணவி தற்கொலை கல்லுாரி முதல்வர், 6 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 13, 2026 05:00 AM

Google News

ADDED : ஜன 13, 2026 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சர்ஜாபூர்: பல் மருத்துவ மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில், கல்லுாரி முதல்வர் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

பெங்களூரு ரூரல் சந்தாபூரில் வசித்தவர் யசஸ்வினி, 23. பொம்மஹள்ளியில் உள்ள தனியார் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு பல் மருத்துவம் படித்தார். கடந்த, ஒன்பதாம் தேதி இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லுாரி நிர்வாகம் கொடுத்த தொல்லையால், யசஸ்வினி உயிரை மாய்த்ததாக கூறி, சக மாணவர்கள், கல்லுாரி முன் போராட்டம் நடத்தினர். மாணவி எழுதிய கடிதமும் சிக்கியது.

கடிதத்தில், 'இந்த உலகில் வாழ எனக்கு தகுதி இல்லை; அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள்' என்று எழுதப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சூர்யாநகர் போலீசில் யசஸ்வினி பெற்றோர் அளித்த புகார் மனு விபரம்:

எனது மகளின் நிறம் குறித்து கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். கடந்த 7ம் தேதி கண்வலியால் விடுப்பு எடுத்திருந்தார். மறுநாள் கல்லுாரிக்கு சென்ற போது, சக மாணவர்கள் முன்னிலையில், கண் வலிக்கு என்ன சொட்டு மருந்து பயன்படுத்தினாய்; எத்தனை சொட்டு மருந்து ஊற்றினாய்; முழு பாட்டில் மருந்தையும் கண்ணில் ஊற்றினாயா என்று கேட்டு, பேராசிரியர்கள் கேலி, கிண்டல் செய்து உள்ளனர்.

கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிலும் பங்கேற்க விடவில்லை. யசஸ்வினியை தற்கொலைக்கு துாண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின்படி கல்லுாரி முதல்வர், நிர்வாகம், பேராசிரியர்கள் என ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us