/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நந்திமலையில் சிறுத்தை: சுற்றுலா பயணியர் கிலி
/
நந்திமலையில் சிறுத்தை: சுற்றுலா பயணியர் கிலி
ADDED : ஜன 13, 2026 05:01 AM
சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், சிறுத்தை தொல்லை அதிகரித்துள்ளது. தற்போது நந்தி மலையில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. நந்திமலையின் கனிவே பசவண்ணர் கோவில் அருகே, நேற்று முன்தினம் இரவு சிறுத்தை நடமாடியது.
நந்திமலை, சுற்றுலா பயணியருக்கு பிடித்தமான இடம்; இயற்கை காட்சிகள் நிறைந்த இடம். இங்கு வருவதற்கு சுற்றுலா பயணியர் அதிகம் விரும்புவர். தினமும் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்க்கவும், நடை பயிற்சிக்கும் அதிகமானோர் வருகின்றனர்.
நந்திமலையில் மக்கள் நடமாடும் சாலையிலேயே, சிறுத்தை காணப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். பொது மக்கள், சுற்றுலா பயணியர், வாகன ஓட்டுனர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
முடிந்த வரை தனியாக நடமாடுவதை தவிர்த்து, கூட்டமாக செல்லும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

