/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,000 - ரூ.2,000 டிபாசிட்
/
முதல் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,000 - ரூ.2,000 டிபாசிட்
முதல் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,000 - ரூ.2,000 டிபாசிட்
முதல் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,000 - ரூ.2,000 டிபாசிட்
ADDED : மே 30, 2025 11:08 PM
பெங்களூரு: கர்நாடக அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மாநில அரசு சிறப்பு திட்டம் வகுத்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், மாணவர்களின் பெயரில் பணம் டிபாசிட் செய்யும் திட்டத்தை வகுத்துள்ளது. முதற்கட்டமாக பாகல்கோட் மாவட்டத்தில் செயல்படுத்தி உள்ளது.
கலால்துறை அமைச்சர் திம்மாபூர், சமீபத்தில் பாகல்கோட்டின் உத்துார் கிராமத்தில் உள்ள, தான் படித்த 108 வயதான பழைய தொடக்கப் பள்ளியை பார்வையிட்டார். இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படும் சிறார்களின் பெயர்களில், 2,000 ரூபாய் டிபாசிட் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதாக உறுதி அளித்தார்.
அதன்படியே பாகல்கோட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. உத்துார், ஷிரோளா, ஹனகன்டி உட்பட பாகல்கோட்டின் பல்வேறு அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு சேர்ந்த சிறார்களுக்கு, 2,000 ரூபாய் டிபாசிட் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தை, வரும் நாட்களில் மாநிலம் முழுவதும் விஸ்தரிக்க அரசு முடிவு செய்துள்ளது.