/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டில்லியில் வேலை இல்லை துணை முதல்வர் தகவல்
/
டில்லியில் வேலை இல்லை துணை முதல்வர் தகவல்
ADDED : ஜூன் 04, 2025 01:15 AM

பெங்களூரு : ''கட்சி மேலிட தலைவர்கள் அழைத்தால், புதுடில்லி செல்வேன். தற்போதைக்கு எனக்கு அங்கு எந்த வேலையும் இல்லை,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அமைச்சரவை கூட்டத்துக்கு பின், அமைச்சரவை விரிவாக்கம் நடக்குமா, என்று துணை முதல்வர் சிவகுமாரிடம் கேட்டபோது, அவர் அளித்த பேட்டி:
இது குறித்து கட்சி மேலிடம், முதல்வர் சித்தராமையாவிடம் தான் கேட்க வேண்டும். கட்சி மேலிடம் என்னை அழைத்தால், டில்லி செல்வேன். இப்போதை அங்கு, எனக்கு எந்த வேலையும் இல்லை.
கார்ப்பரேஷன்களுக்கு உறுப்பினர்கள் பெயர் பட்டியல் தயாராக உள்ளது. உள்ளூர் தலைவர்களுடன் ஆலோசித்த பின், பெயர் அறிவிக்கப்படும். ஏற்கனவே வாக்குறுதி கமிட்டிக்கு, 4,000 தொண்டர்கள், பல்வேறு கமிட்டிகளுக்கு 8,000 தொண்டர்களை நியமித்து உள்ளோம். மாநில அளவில் 500 முதல் 600 பேருக்கு வாய்ப்பு வழங்க வேண்டி உள்ளது.
கர்நாடக மேல்சபையில் காலியாக உள்ள நான்கு இடங்களில், யாருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை கட்சி மேலிடம் தீர்மானிக்கும். அலமாட்டி அணை நீர்மட்டம் உயர்த்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சருடன் விவாதிப்போம்.
இவ்வாறு கூறினார்.