நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பாக எம்.பி.,க்களுடன் ஆலோசிப்பேன் துணை முதல்வர் சிவகுமார் தகவல்
நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பாக எம்.பி.,க்களுடன் ஆலோசிப்பேன் துணை முதல்வர் சிவகுமார் தகவல்
ADDED : மார் 13, 2026 06:06 AM
பெங்களூரு: ''கர்நாடகாவின் நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பாக, வரும் செவ்வாயன்று, எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்துவேன்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
மேல்சபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, ம.ஜ.த., உறுப்பினர் திப்பண்ணா கனகநுாராவின் கேள்விக்கு பதில் அளித்து, துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் ஆகியோருடன், டில்லிக்கு சென்று எம்.பி.,க்களை சந்திப்பேன். கர்நாடக அரசின் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்துவேன். மாநிலத்தின் நீர்ப்பாசன திட்டங்கள் எதிர் கொண்டுள்ள பிரச்னைகள், மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதியுதவி போன்ற விஷயங்கள் பற்றி ஆலோசிப்போம்.
முக்கியமாக நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பாக, நீதிமன்றத்தில் திறமையாக வாதிட அனுகூலமாகும் வகையில், தனி வக்கீல்கள் குழு அமைக்கப்படும். நீர்ப்பாசன துறையின் கிருஷ்ணா நீர்ப்பாசன கார்ப்பரேஷன், கர்நாடக நீர்ப்பாசன கார்ப்பரேஷன்கள் திட்டம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு தொடர்பாக மாநில அரசு திறமையாக வாதிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருநங்கையருக்கு
தனி கழிப்பறை
காங்கிரஸ் உறுப்பினர் ஆர்த்தி கிருஷ்ணாவின் கேள்விக்கு பதிலளித்து, துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
பெங்களூரில் திருநங்கையருக்கு, தனி கழிப்பறைகள் கட்டும் ஆலோசனை உள்ளது. ஜி.பி.ஏ., எல்லைக்கு உட்பட்ட ஐந்து மாநகராட்சிகளின் எல்லையில், பொது கழிப்பறைகள் கட்டுவது குறித்து, எந்த தொண்டு அமைப்பும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. புகாரும் அளிக்கவில்லை.
பொது கழிப்பறைகளில், கண்காணிப் பு கேமராக்கள் பொருத்தவில்லை. பெண்களின் பாதுகாப்புக்காக, ஜி.பி.ஏ., தனியாக, 100 ' ஷீ டாய்லெட்' கட்ட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறை, உடை மாற்றும் அறை, குளியலறை, ஹேண்ட்வாஷ், கண்ணாடி உட்பட, அனைத்து வசதிகளும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
