/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பங்கார்பேட்டை தாலுகா ஆபீசில் உப லோக் ஆயுக்தா நீதிபதி ஆய்வு
/
பங்கார்பேட்டை தாலுகா ஆபீசில் உப லோக் ஆயுக்தா நீதிபதி ஆய்வு
பங்கார்பேட்டை தாலுகா ஆபீசில் உப லோக் ஆயுக்தா நீதிபதி ஆய்வு
பங்கார்பேட்டை தாலுகா ஆபீசில் உப லோக் ஆயுக்தா நீதிபதி ஆய்வு
ADDED : ஜூன் 05, 2025 11:36 PM

பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை தாலுகா அலுவலகம், டவுன் சபை, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா நேற்று திடீர் சோதனை நடத்தினார்.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் குறைகளை அவர் கேட்டார்.
பங்கார்பேட்டை டவுன் சபையில் அதிகாரிகள், ஊழியர்கள் ஆஜர் பதிவு புத்தகத்தையும், வரி வசூல் விபரங்களை கேட்டார்.
“தாலுகா அலுவலகத்தில் நிலுவையில் உள்ள கோப்புகள் எவ்வளவு; எத்தனை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தாசில்தார் வெங்கடேசப்பா பதில் அளிக்க தவறியதால் அனைத்து கோப்புகளையும் ஆய்வு செய்ய லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
“ஒரு கோப்பு கூட நிலுவையில் இல்லை என்கிறீர்களா. அப்படியானால் மாநிலத்தில் பங்கார்பேட்டை தான் நிலுவையே இல்லாத டவுன் சபை என்று அறிவிக்க வேண்டுமா?” என கேட்டு, வருவாய்த்துறையினரை மிரள வைத்தார்.
அதிகாரிகள், ஊழியர்கள் ஆஜர் பதிவு புத்தகத்தில் குளறுபடி உள்ளதை சுட்டிக் காட்டி விளக்கம் கேட்டார். இதனால் தாலுகா அலுவலகமே மிரண்டது.
“கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் பொறுபற்று செயல்பட கூடாது. பொதுமக்களை ஏமாற்றக்கூடாது,” என, உப லோக் ஆயுக்தா நீதிபதி எச்சரித்தார்.