தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு காரை  பயன்படுத்தும் துணை சபாநாயகர் மகன்

அரசு காரை  பயன்படுத்தும் துணை சபாநாயகர் மகன்

அரசு காரை  பயன்படுத்தும் துணை சபாநாயகர் மகன்


ADDED : ஏப் 07, 2025 10:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2025 10:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாவேரி; துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானிக்கு கொடுக்கப்பட்ட அரசு காரை, தன் சொந்த தேவைக்கு அவரது மகன் பயன்படுத்தி வருகிறார்.

கர்நாடக சட்டசபை துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி. ஹாவேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான இவர், கடந்த மாதம் பெங்களூரில் இருந்து ஹாவேரிக்கு அரசு காரில் சென்றார்.

சித்ரதுர்கா அருகே சிறுநீர் கழிக்க காரில் இருந்து இறங்கியபோது, வேகமாக வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

இந்நிலையில், ருத்ரப்பா லமானிக்கு அரசு வழங்கிய காரை, அவரது மகன் தர்ஷன் லமானி, தன் தேவைக்கு பயன்படுத்தி வருகிறார். பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு, அரசு காரில் ஹாவேரி சென்றுள்ளார். நேற்று காலை ஹாவேரி நகரில் அரசு காரில் அவர் உலா வந்தார்.

விருந்தினர் மாளிகைக்கு கார் சென்றது. ருத்ரப்பா லமானி வந்து விட்டதாக நினைத்து அரசு ஊழியர்கள் காரின் அருகே சென்றனர்.

உள்ளே பார்த்தபோது, தர்ஷன் லமானி இருந்தது தெரிந்தது. 'அரசு காரை மக்கள் பிரதிநிதிகள் பிள்ளைகளும் பயன்படுத்தலாமா?' என்று, பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us