/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அதிக லாபம் ஆசை ரூ.63 லட்சம் அபேஸ்
/
அதிக லாபம் ஆசை ரூ.63 லட்சம் அபேஸ்
ADDED : ஆக 10, 2025 08:35 AM
தார்வாட்: 'ஆன்லைன் டிரேடிங்' செயலி வழியாக, நபருக்கு அதிக லாபம் ஆசை காண்பித்து, 63 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
தார்வாட் நகரின் வித்யாகிரியில் வசிப்பவர் அரவிந்த்குமார். கடந்த மாதம், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்க்கும்போது, விளம்பர லிங்க் ஒன்றை 'க்ளிக்' செய்தார். அதில் 'எக்சிஸ் எஸ் எக்ஸ் டிரேடிங் ஆப்' என்ற போலி ஆன்லைன் பிளாட்பார்ம் திறந்து கொண்டது.
'பணம் முதலீடு செய்தால், குறுகிய நாட்களில் அதிகமான லாபம் சம்பாதிக்கலாம்' என, விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. சில நபர்கள், அவரை தொடர்பு கொண்டு, ஆசை காண்பித்தனர்.
இதை நம்பிய அவர், அந்நபர் கூறிய வங்கிக் கணக்குகளில் பல முறைகளில் 63.30 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்தார். ஆனால் லாபமும் வரவில்லை; அனுப்பிய பணமும் கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், ஹூப்பள்ளி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

