தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/'பெங்களூரின் அடுத்த 15 ஆண்டுகளுக்கு வளர்ச்சிக்கான விரிவான திட்டம் தயார்'

'பெங்களூரின் அடுத்த 15 ஆண்டுகளுக்கு வளர்ச்சிக்கான விரிவான திட்டம் தயார்'

'பெங்களூரின் அடுத்த 15 ஆண்டுகளுக்கு வளர்ச்சிக்கான விரிவான திட்டம் தயார்'


UPDATED : அக் 06, 2026 04:26 AM

ADDED : அக் 05, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 04:26 AM ADDED : அக் 05, 2026 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''பெங்களூரின் அடுத்த 15 ஆண்டுக்கான வளர்ச்சிக்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது,'' என்று முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.

முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில், பெங்களூரு பெருநகர மண்டல பொருளாதார வளர்ச்சி குறித்த ஆலோசனை குழு கூட்டம், சிவகுமார் தலைமையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

செயல் திட்டம்



சிவகுமார் பேசியதாவது:

நமது மாநிலத்தின் பொருளாதாரம் 2047ம் ஆண்டிற்குள், ஒரு டிரில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2037ம் ஆண்டிற்குள் 400 முதல் 420 பில்லியன் டாலரை எட்டுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு பெருநகர பகுதியில் சீரான போக்குவரத்து அமைப்பு, வீட்டுவசதி, தொழில்துறை மேம்பாட்டிற்கு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு பெருநகர பகுதியில் 9 புதிய ஒருங்கிணைந்த தொழில் துறை நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக ஏற்கனவே 7,900 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 5,600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. செயற்கை நுண்ணறிவு நகரத்தின் கட்டுமானத்தை அறிவித்துள்ளோம்.

சிங்கப்பூர் மாதிரி



இந்த நகரத்தை சிங்கப்பூர் மாதிரியில் கட்டப்பட வேண்டும். இதற்கு நிலம் தேவைப்படுகிறது. இடத்தை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெங்களூரு நகரத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தையும் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் கீழ் கொண்டு வந்து, குடிநீர், கழிவுநீர் அமைப்பை படிப்படியாக மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நகர்ப்புற மாவட்ட பகுதிகள், உள்ளாட்சி அமைப்பின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வரப்படும். பெங்களூரின் அடுத்த 15 ஆண்டுக்கான வளர்ச்சிக்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பெங்களூரு நகருக்குள் 2037ம் ஆண்டிற்குள், 312 கி.மீ., துார மெட்ரோ இணைப்பு; 72 கி.மீ., துார கூடுதல் புறநகர் ரயில் இணைப்பு திட்டம்; 210 கி.மீ., துார கூடுதலாக இணைப்பு சாலை; பெங்களூரு - துமகூரு; பெங்களூரு - மைசூரு; பெங்களூரு - தங்கவயல் ஆகிய மூன்று வழித்தடங்களை இணைக்கும் சாலை அமைப்பது.

மும்பை - பெங்களூரு அதிவேக ரயில் பாதையை மைசூரு வரை நீட்டிப்பது; தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்கும் திட்டம்; சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஏரிகளுக்கு நிரப்புதல் உட்பட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us