அதிகரிக்கும் கலால் துறை வருவாய் 5 மாதங்களில் ரூ.2,600 கோடி லாபம்
அதிகரிக்கும் கலால் துறை வருவாய் 5 மாதங்களில் ரூ.2,600 கோடி லாபம்
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 10:24 PM
பெங்களூரு: கர்நாடக அரசின் கருவூலத்துக்கு, கலால்துறை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தந்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 2,600 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
கர்நாடக அரசு கருவூலத்தை நிரப்புவதில், கலால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு கலால் துறையின் வருவாய் அதிகரிக்கிறது.
இதை மனதில் கொண்டே, ஆண்டுதோறும் பட்ஜெட்டில், மாநில அரசு கலால் துறைக்கு வருவாய் இலக்கை அதிகரிக்கிறது. இந்த இலக்கை தாண்டி இத்துறை வருவாய் வசூலிக்கிறது.
கலால் துறையின் வருவாய், தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, 15 ஆயிரத்து 376 கோடி ரூபாய் மதுபான வர்த்தகம் நடந்தது. இம்முறை 17 ஆயிரத்து 424 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிட்டால், இம்முறை 2,621 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
மாநில அரசு, மதுபான விலையை அதிகரிப்பதற்கு பதிலாக, அதில் உள்ள ஆல்கஹால் அளவு அடிப்படையில், வரி விதிக்கும் 'ஆல்கஹால் இன் பீவரேஜ்' கொள்கையை செயல்படுத்தியது. இதனால் குறைந்த அளவு ஆல்கஹால் உள்ள பீர் விலை குறைந்துள்ளது. இதன் பயனாக பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
வாக்குறுதி திட்டங்களால், அரசு கருவூலம் காலியாகியுள்ளது என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில், கலால் துறை இந்த அளவுக்கு லாபம் அடைந்துள்ளது.
