தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அடுத்தடுத்த தேர்தல்களிலும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும்! முதல்வர் வேட்பாளர் குறித்து எடியூரப்பா 'சஸ்பென்ஸ்'

அடுத்தடுத்த தேர்தல்களிலும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும்! முதல்வர் வேட்பாளர் குறித்து எடியூரப்பா 'சஸ்பென்ஸ்'

அடுத்தடுத்த தேர்தல்களிலும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும்! முதல்வர் வேட்பாளர் குறித்து எடியூரப்பா 'சஸ்பென்ஸ்'


UPDATED : அக் 06, 2026 03:41 AM

ADDED : அக் 05, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 03:41 AM ADDED : அக் 05, 2026 10:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடக மேல்சபையில் காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு, வரும் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. பெங்களூரு ஆசிரியர்கள் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.ஜ.த., வேட்பாளர் ஏ.பி.ரங்கநாத், கர்நாடக தென்கிழக்கு பட்டதாரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் கே.எம்.சுரேஷ் ஆகிய இருவரும், பெங்களூரு மண்டல தேர்தல் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இவர்களுடன் மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதுபோல, கர்நாடக வடகிழக்கு ஆசிரியர் தொகுதி வேட்பாளர் பா.ஜ.,வின் சஷில் நமோஷி, கலபுரகி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பாவும் உடனிருந்தார்.

இதையடுத்து, எடியூரப்பா அளித்த பேட்டி:

கண்டிக்கத்தக்கது



எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். எந்த தவறும் செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது. இவ்விஷயத்தில் முதல்வர் சிவகுமார் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்.

மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர்களுக்கும், பே ராசிரியர்களுக்கும் உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் ஷூ, சாக்ஸ் சரியில்லை. அதிலும், ஊழல் நடக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு காண ஆசிரியர் தொகுதியில் போட்டியிடும் சஷில் நமோஷியை வெற்றி பெற வை க்க வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 2,500 ரூபாய் வழங்குவதாக முதல்வர் சிவகுமார் அறிவித்தார். இது வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டது. சிவகுமார் பணபலம், ஜாதி அரசியல் மூலம் தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கிறார்.

மக்கள் சலிப்பு



மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியால் மக்கள் சலிப்படைந்து உள்ளனர். அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில், மாநில அரசு தோல்வியடைந்து விட்டது. இது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மாநிலத்தில் வரவிருக்கும் அனைத்து தேர்தல்களையும் பா.ஜ., மற்றும் ம.ஜ.த., இணைந்தே சந்திக்கும். 2028 சட்டசபை தேர்தலையும் பா.ஜ., - ம.ஜ.த., இணைந்தே சந்திக்கும். கர்நாடகாவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்; அதுவே, எங்கள் நோக்கம்.

முதல்வர் வேட்பாளர் குறித்து பின்னர் முடிவு செய்வோம். தேர்தலில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். முதல்வர் யார் என்பது பின்னர் அறிவிக்கப்படும். இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு, பாரத ரத்னா வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்க போகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us