தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மைசூரில் 'அபிமன்யு'வுக்கு உற்சாக வரவேற்பு

மைசூரில் 'அபிமன்யு'வுக்கு உற்சாக வரவேற்பு

மைசூரில் 'அபிமன்யு'வுக்கு உற்சாக வரவேற்பு


UPDATED : அக் 06, 2026 03:42 AM

ADDED : அக் 05, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 03:42 AM ADDED : அக் 05, 2026 10:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தை முன்நின்று நடத்துவதற்காக, மைசூரு அரண்மனைக்கு வந்த, அபிமன்யு யானைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மைசூரு தசராவின் ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது, 2020 - 2025 வரை, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமந்து வந்தது.

அந்த யானைக்கு தற்போது 60 வயதாகி விட்டதால், அம்பாரியை சுமப்பதில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனாலும் அபிமன்யு யானையின் ரசிகர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, ஜம்பு சவாரி ஊர்வலத்தை முன்நின்று நடத்தும் வாய்ப்பை, அபிமன்யு யானைக்கு, அரசு மீண்டும் வழங்கியது.

இந்நிலையில் குடகின் திதிமதியில் உள்ள மத்திகோடு யானைகள் முகாமில் இருந்து, மைசூரு அரண்மனைக்கு அபிமன்யு யானை நேற்று அழைத்து வரப்பட்டது. அரண்மனையின் நுழைவு வாயில் பகுதியில், அபிமன்யுக்கு மலர் துாவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தலைப்பாகை, எலுமிச்சை பழம் மாலை, பிரமாண்ட மாலை அணிவித்து, எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சா, அரண்மனை நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியா, வனத்துறை அதிகாரி பிரபு கவுடா உள்ளிட்டோர் வரவேற்றனர். ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க வந்துள்ள 14 யானைகளுடன், அபிமன்யுவும் விடப்பட்டது. இன்று முதல் அபிமன்யுவும் நடைபயிற்சிக்கு செல்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us