UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 10:24 PM
பெலகாவி: பசுக்களுக்கு தீவனம் போடும் விஷயத்தில், தம்பதிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம், மனைவியின் கொலையில் முடிந்தது.
பெலகாவி மாவட்டம், ராய்பாக் தாலுகாவின் மாடலகி கிராமத்தில் வசிப்பவர் சதாசிவா மரடி, 67. இவரது மனைவி கல்லவ்வா, 55. இவர்களுக்குள் சிறு சிறு விஷயங்களுக்கும் சண்டை நடக்கும். நேற்று காலையில் பசுக்களுக்கு தீவனம் போடும் விஷயத்தில், தம்பதி இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.
ச ண்டைக்கு பின் பசுக்களுக்கு புல் கொண்டு வர கல்லவ்வா, வீட்டின் அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு சென்றார். கோபம் தணியாத சதாசிவா மரடி, அரிவாளுடன் மனைவியின் பின் சென்றார். தோட்டத்தில் புல் அறுத்து கொண்டிருந்த மனைவியின் கழுத்தி ல் அரிவாளால் வெட்டி கொன்றார்.
தகவலறிந்து வந்த ராய்பாக் போலீசார், கல்லவ்வா உடலை மீட்டனர்; சதாசிவா மரடியை கைது செய்தனர்.
