/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
நாட்டுப்புற பாடலில் அசத்தும் தேவகி
/
நாட்டுப்புற பாடலில் அசத்தும் தேவகி
ADDED : செப் 07, 2025 02:35 AM

சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுப்புற பாடல்களை கேட்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்தது. இன்றைய நவீன காலத்தில் இளம் தலைமுறையினர் குத்தாட்டம் போட வைக்கும் பாடல்களையே அதிகம் கேட்கின்றனர். நாட்டுப்புற பாடல் இருப்பதை மறந்து விட்டனர்.
நாட்டுப்புற பாடல் கேட்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. பாரம்பரியத்தை தெரிந்து கொள்ளவும், கலாசார அறிவு, சமூ கம் பற்றிய அறிவை பெறவும் வழிவகுக்கிறது. குடகு மடிகேரியில் வசிக்கும் 65 வயது மூதாட்டி தேவகி, நாட்டுப்புற பா டல்களுக்கு உயிர் கொடுக்கும் வேலையை இன்னமும் செய்கிறார்.
அவர் மன மகிழ்ச்சியுடன் கூறியதாவது:
நாட்டுப்புற பாடல்களை கேட்பதன் மூலம், மனிதர்கள் நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்வதை யாராலும் தடுக்க முடியாது. கடந்த 30 ஆண்டுகளாக நாட்டுப்புற பாடல் பாடுகிறேன். மொழி, இனம், மதம், ஜாதி அனைத்தும் கடந்து, நான் பாடும் பாடல் பலரது மனதை தொட்டு உள்ளது.
குடகின் பாரம்பரியமாக நாட்டுப்புற பாடல்கள், இசை உள்ளது. இதனை விவரிக்க வார்த்தைகள் போதாது. குடகிற்கு என்று தனித்துவமாக கருதப்படும் நடனம், பாடல்கள் உள்ளன. எனக்கு தெரிந்த நாட்டுப்புற பாடல் பாடும் கலையை 12 பேருக்கு சொல்லி கொடுத்து உள்ளேன்.
எனது குழுவினர் கர்நாடகாவில் மட்டுமின்றி கேரளா, கோவாவிலும் நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சியை அரங்கேற்றி உள்ளனர். இந்த கலையை எனது பெற்றோரிடம் இருந்து தான் கற்று கொண்டேன்.
நான் ஐந்தாம் வகுப்பு தான் படித்து உள்ளேன். ஆனாலும் நாட்டுப்புற பாடல் மீதான ஆர்வம் என்னை நிறைய கற்று கொள்ள வைத்து உள்ளது. இந்த கலையை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல வேண்டும். எதிர்காலத்தில் இந்த கலை இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. எனது திறமையை அங்கீகரித்து கர்நாடக அரசு 'கர்நாடக ஜனபத அகாடமி' கடந்த 2023ல் விருது வழங்கியது.
இவ்வாறு அவர் கூறினார்.
--- நமது நிருபர் --