/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ம.ஜ.த., வெள்ளி விழா கொண்டாட்டம் சித்தராமையா மீது தேவகவுடா புகார்
/
ம.ஜ.த., வெள்ளி விழா கொண்டாட்டம் சித்தராமையா மீது தேவகவுடா புகார்
ம.ஜ.த., வெள்ளி விழா கொண்டாட்டம் சித்தராமையா மீது தேவகவுடா புகார்
ம.ஜ.த., வெள்ளி விழா கொண்டாட்டம் சித்தராமையா மீது தேவகவுடா புகார்
ADDED : நவ 22, 2025 05:11 AM

சேஷாத்திரிபுரம்: ''இன்று யார் முதல்வராக இருக்கிறாரோ, அவரே அன்று எங்கள் அரசை கவிழ்த்தார்,'' என, முதல்வர் சித்தராமையாவை ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா குற்றஞ்சாட்டினார்.
ம.ஜ.த.. உருவாகி, 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பெங்களூரின், சேஷாத்திரிபுரத்தில் உள்ள ம.ஜ.த., அலுவலக வளாகத்தில் வெள்ளி விழா நேற்று நடந்தது.
இதில் தேவகவுடா பேசியதாவது:
இன்றைய முதல்வரே, அன்றைய கூட்டணி அரசை கவிழ்த்தார். 18 எம்.எல்.ஏ.,க்களை மும்பைக்கு அனுப்பினார். உண்மையை யாராலும் மறைக்க முடியாது. எங்களுக்கு தெய்வத்தின் அனுகிரகம் உள்ளது.
இரு முறை முதல்வர் குமாரசாமி இரண்டு முறை முதல்வராக பணியாற்றி, அனுபவம் பெற்றவர். மாநிலத்தின் பிரச்னை அவருக்கு நன்றாக தெரியும். கர்நாடகாவில் ம.ஜ.த. தலை துாக்கி நிற்க வேண்டும்.
தேவகவுடா முடிந்துவிட்டார் என, பலர் நினைக்கின்றனர். 93 வயதில் கட்சியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, கொடி ஏற்றினேன். கட்சிக்காக போராடும் குணம் எனக்குள்ளது.
தினமும் டயாலிசிஸ் செய்து கொள்கிறேன். சரளமாக பேசும் சக்தியை, கடவுள் எனக்கு கொடுத்துள்ளார். ம.ஜ.த., மீண்டும் வலுப்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து நடந்த கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவராக தேவகவுடாவும், மாநில தலைவராக குமாரசாமியும் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
'விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், கட்சியை ஒழுங்கமைக்க வேண்டும்' என்பது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சேஷாத்திரிபுரம் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிளக்ஸ்கள், பேனரில் குறிப்பிடப்பட்டிருந்த பிரதமர், முதல்வராக இருந்து தேவகவுடா செய்த சாதனைகளை பார்த்து குமாரசாமி வியப்படைந்தார்.
ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவர் சுரேஷ்பாபு, இளைஞர் அணி தலைவர் நிகில் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.
நிறுவன தினம் இதற்கிடையில், பெங்களூரில் உள்ள ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மடத்தின் கல்வி அறக்கட்டளையின் 17வது நிறுவன தினம் நேற்று நடந்தது. மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி பேசியதாவது:
அரசு பள்ளிகளை மூடுவதில், காங்கிரஸ் அரசு ஆர்வமாக உள்ளது. விவசாயிகள், ஏழைகள், பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களின் குழந்தைகளுக்கு கல்வி, உணவு கிடைக்க மடங்கள் உதவுகின்றன. அரசு செய்ய வேண்டிய பணிகளை செய்வதால், மடங்களுக்கு என் பாராட்டுகள்.
கல்வி நிறுவனங்களை உருவாக்குவது எளிது. அவற்றை நிர்வகிப்பது, நடத்துவது எளிதல்ல. தொலைநோக்கு பார்வை, சமூகத்தின் மீதான அக்கறையில் மடங்கள் பங்களிப்பு அளப்பரியது. சமூக சேவைக்கு மத்தியில் ஆன்மிக சேவையிலும் மடங்கள் முன்னணியில் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய தொழிலாளர் நல இணை அமைச்சர் ஷோபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

