/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாழ்த்து மழையில் நனைந்த தேவகவுடா
/
வாழ்த்து மழையில் நனைந்த தேவகவுடா
ADDED : மே 18, 2025 11:17 PM
பெங்களூரு,: முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று தனது 93 வது பிறந்தநாளை கொண்டாடினர். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களின் வாழ்த்து மழையில் நனைந்தார்.
நாட்டில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் தேவகவுடா. முன்னாள் பிரதமரான இவருக்கு நேற்று 93 வயது பிறந்தநாள். பிறந்தநாளை முன்னிட்டு தேவகவுடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, சிவராஜ்சிங் சவுஹான், பிரஹலாத் ஜோஷி, அர்ஜுன் முண்டா, ராம்மோகன் நாயுடு, ஜிதின் ராம் மஞ்சி உள்ளிட்டோரும், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
மத்திய கனரக தொழில் அமைச்சரும், தேவகவுடாவின் மகனுமான குமாரசாமியும் தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். சேஷாத்திரிபுரத்தில் உள்ள ம.ஜ.த., அலுவலகத்தில் தொண்டர்களுடன் கேக் வெட்டி, பிறந்தநாளை தேவகவுடா கொண்டாடினார்.