/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மலை மஹாதேஸ்வரா மலையில் பக்தர்கள் தங்குவதற்கு தடை
/
மலை மஹாதேஸ்வரா மலையில் பக்தர்கள் தங்குவதற்கு தடை
ADDED : ஏப் 22, 2025 05:07 AM
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர், ஹனுார் தாலுகாவில் உள்ள மலை மஹாதேஸ்வரா மலையில் வரும் 24ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. சில மாதங்களாக அமைச்சரவை கூட்டம் சாம்ராஜ்நகரில் நடத்தப்படுவதாக கூறப்பட்டது. கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 24ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளை மாவட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
அமைச்சரவை கூட்டத்தில் மலை மஹாதேஸ்வரரின் வரலாற்றை கூறும் அருங்காட்சியம், குடியிருப்பு வளாகம், மாவட்ட மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சரவை கூட்டம் நடக்க இருப்பதால் இன்று முதல் 24ம் தேதி வரை, கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என, மலை மஹாதேஸ்வரா கோவில் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என, கோவில் ஆணையத்தின் செயலர் ரகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.