'டி.ஜி.பி., ஆபாச வீடியோ போலியானது அல்ல' விசாரணை குழு அறிக்கை
'டி.ஜி.பி., ஆபாச வீடியோ போலியானது அல்ல' விசாரணை குழு அறிக்கை
ADDED : மார் 21, 2026 05:41 AM
பெங்களூரு: 'கர்நாடகா மனித உரிமைகள் ஆணைய டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ் தொடர்பான ஆபாச வீடியோக்கள் போலியானவை அல்ல' என, விசாரணை குழு தெரிவித்து உள்ளது.
கர்நாடக ஐ.ஜி.பி., என்ற, இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் அலுவலகத்தில், 2016- - 2017ல் போலீஸ் டி.ஜி.பி., ராமசந்திரராவ் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதனால், டி.ஜி.பி., ராமசந்திரராவை, கர்நாடக அரசு இடைநீக்கம் செய்தது. 'வீடியோக்கள் உண்மையானவை அல்ல. அது, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை' என, ராமச்சந்திர ராவ் தெரிவித்தார். இதுபற்றி விசாரிக்க, தொழில் நுட்ப நிபுணர்கள் அடங்கிய விசாரணை குழுவை, கர்நாடக அரசு அமைத்தது.
அந்தக் குழு விசாரணை நடத்தி, 'வீடியோக்கள் ஐ.ஜி., அலுவலகத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏ.ஐ., மூலம் உருவாக்கப்பட்டவை அல்ல. அவை உண்மையானவை' என, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், தற்போது கர்நாடக அரசு, ராமச்சந்திரராவுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் மீது விசாரணை தொடங்கி உள்ளது.
