/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
என்.ஐ.ஏ., விசாரணை கோரி செப்., 1ல் தர்மஸ்தலா பேரணி
/
என்.ஐ.ஏ., விசாரணை கோரி செப்., 1ல் தர்மஸ்தலா பேரணி
ADDED : ஆக 26, 2025 03:04 AM

பெங்களூரு: ''தர்மஸ்தலா விவகாரத்தில் என்.ஐ.ஏ., விசாரணைக்கு உ த்தரவிட கோரி, தர்மஸ்தலாவில் செப்., 1ம் தேதி பேரணி நடத்தப்படும்,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:
தர்மஸ்தலா விவகாரம் தொடர்பான விசாரணையை, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதன் பின்னணியில் உள்ள அமைப்புகள், தீங்கு விளைவிக்கும் சக்திகளை கண்டறிவது அவசியம்.
அப்போது தான், அரசு மீது நம்பிக்கை ஏற்படும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, செப்., 1ம் தேதி 'தர்மஸ்தலாவில் பேரணி' நடத்தப்படும். இதில், ஒவ்வொரு சட்டசபை தொகுதி, மாவட்டத்தில் இருந்தும் திரளானோர் பங்கேற்பர்.
அன்றயை தினம், அந்தந்த மாவட்டம், நகரங்கள், கிராமங்களை சேர்ந்தவர்கள், கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து, தர்மஸ்தலாவுக்கு செல்லுங்கள். இவ்விவகாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும், அன்று மதியம் 2:00 மணியளவில் கூட்டம் நடக்கும்.
இவ்வழக்கை, தட்சிண கன்னடா போலீசார் விசாரிப்பர் என்று அரசு கூறியது. மறுநாள், எஸ்.ஐ.டி.,யிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது. ஒரே இரவில் தனது நிலைப்பாட் டை முதல்வர் மாற்ற காரணம் என்ன.
இவ்வாறு கூறினார்.