/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமியர் கர்ப்பம் அதிகரிப்பு தார்வாட் அதிகாரிகள் அதிர்ச்சி
/
சிறுமியர் கர்ப்பம் அதிகரிப்பு தார்வாட் அதிகாரிகள் அதிர்ச்சி
சிறுமியர் கர்ப்பம் அதிகரிப்பு தார்வாட் அதிகாரிகள் அதிர்ச்சி
சிறுமியர் கர்ப்பம் அதிகரிப்பு தார்வாட் அதிகாரிகள் அதிர்ச்சி
ADDED : ஆக 06, 2025 12:24 AM
தார்வாட் : தார்வாடில் சிறுமியர் கர்ப்பமாவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தார்வாட் மாவட்டத்தில் காதல் விவகாரங்களில் ஈர்க்கப்பட்டு சிறுமியர் கர்ப்பமாவது அதிகரித்து வருகிறது. இது, பெண் பிள்ளைகளின் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தீபா ஜாவூர் கூறியதாவது:
பள்ளியில் படிக்கும் மாணவியர், தங்கள் காதலனுடன் உறவு கொள்வதால், பல சிறுமியர் கர்ப்பமாகின்றனர். சமீப காலமாக, தார்வாட்டில் சிறுமியர் கர்ப்பமாவது அதிகரித்துள்ளது.
சிறுமியருக்கு உறவு குறித்த சரியான புரிதல் இல்லாததே, கர்ப்பம் தரிக்க காரணமாக உள்ளது.
கடந்த 2024 - 25ல் 31 சிறுமியர்; நடப்பாண்டில், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மூன்று சிறுமியர் கர்ப்பமாகி உள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், இரண்டு சிறுமியர் குழந்தை பெற்றெடுத்தனர்; ஒருவர் மட்டும் கருக்கலைப்பு செய்துவிட்டார்.
கர்ப்பமாகும் சிறுமியர் எண்ணிக்கை குறித்து வழக்குப் பதிவு செய்வது குறைந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இருப்பினும், வழக்குப் பதிவு செய்வது குறைந்துள்ளதே தவிர, சிறுமியர் கர்ப்பமாவது குறைந்தபாடில்லை. பல சிறுமியருக்கு குழந்தைகள் பிறந்து சில ஆண்டுகள் கழித்தே சம்பவம் வெளிச்சத்திற்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.