தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/  'கேரளாவுக்கு சுற்றுலாவா சென்றேன்?' அமைச்சர் கோபம்

  'கேரளாவுக்கு சுற்றுலாவா சென்றேன்?' அமைச்சர் கோபம்

  'கேரளாவுக்கு சுற்றுலாவா சென்றேன்?' அமைச்சர் கோபம்


ADDED : ஏப் 16, 2026 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 04:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கேரளாவுக்கு ஜாலியாக ஊர் சுற்றவோ அல்லது மோசமான அரசியல் செய்யவோ செல்லவில்லை,'' என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்தார்.

தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்துக்கு வராத நசீர் அகமது, முதல்வரின் அரசியல் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் பதவியை ராஜினாமா செய்த அப்துல் ஜப்பாரை, கட்சியின் அடிப்படையில் உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, கட்சி தலைமை நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூரில் நேற்று அமைச்சர் ஜமீர் அகமது கான் அளித்த பேட்டி:

கட்சியின் மூத்த தலைவரும், முதல்வரின் அரசியல் செயலராக இருந்த நசிர் அகமது மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது. நான் கேரளாவுக்கு ஊர் சுற்றவோ அல்லது மோசமான அரசியல் செய்யவோ செல்லவில்லை. கட்சி பணியாற்ற சென்றேன்.

என் மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டு, விடுமுறையை கொண்டாட சென்றால் தவறு. கடும் வெயிலிலும் இரவு, பகலாக தினமும் 350 கிலோ மீட்டர் பயணித்து பிரசாரம் செய்துள்ளேன். கட்சி தலைமை கூறியதால் மட்டுமே அங்கு சென்றேன்.

ஏப்., 7ம் தேதி வரை கேரளாவில் இருக்கும்படி உத்தரவிட்டிருந்தனர். ஆனால் முதல்வர் சித்தராமையாவோ, என்னை அழைத்து பிரசாரம் செய்ய உத்தரவிட்டார். அதனால் தான் பாகல்கோட் வந்தேன். தாவணகெரேவுக்கும் சென்று பிரசாரம் செய்தேன்.

இது குறித்து முதல்வரிடம் நேற்று (முன்தினம்) விவாதித்தேன். ஆனால் ஊடகத்திலோ, அடுத்த இலக்கு நான்தான் என செய்திகள் வெளியானது. நாளை (இன்று) துணை முதல்வரும், கட்சி தலைவருமான சிவகுமாரை சந்தித்து பேச உள்ளேன்.

தமிழகத்தின் ஓசூர், கிருஷ்ணகிரியிலும் பிரசாரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அங்கு செல்லவும் திட்டமிட்டு உள்ளேன். கட்சியின் உண்மையான விசுவாசி. என்றுமே ஜாதி அரசியல் செய்ததில்லை. யாரும் என்னை குற்றம்சாட்டியதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us