sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

'மேட்ச் பிக்சிக்' செய்து ஆர்.சி.பி., வென்றதா?

/

'மேட்ச் பிக்சிக்' செய்து ஆர்.சி.பி., வென்றதா?

'மேட்ச் பிக்சிக்' செய்து ஆர்.சி.பி., வென்றதா?

'மேட்ச் பிக்சிக்' செய்து ஆர்.சி.பி., வென்றதா?


ADDED : ஜூன் 06, 2025 11:44 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ஐ.பி.எல்., கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 'மேட்ச் பிக்சிக்' செய்து, ஆர்.சி.பி., அணி கோப்பை வென்றதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், 2008 முதல் நடக்கின்றன. ஒரு முறை கூட ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது இல்லை.

இந்த ஆண்டு நடந்த 18வது ஐ.பி.எல்., சீசனில், கடந்த 3ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் வென்று பெங்களூரு அணி முதல்முறை சாம்பியன் ஆனது. கர்நாடகா முழுதும் ஆர்.சி.பி., ரசிகர்கள் கொண்டாடினர். கடந்த 4ம் தேதி சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 ரசிகர்கள் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக, கப்பன் பார்க் முன்னாள் இன்ஸ்பெக்டர் கிரிஷ் எழுத்துப்பூர்வமாக அளித்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவானது. கிரிஷ் அளித்த புகாரில் கூறப்பட்டு இருந்த சில தகவல்கள் வெளியே கசிந்துள்ளன.

புகாரில் அவர் கூறியிருந்ததாவது:

கடந்த 3ம் தேதி இரவு குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல்., கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதின. அன்றைய தினம் இரவு 7:00 மணிக்கு டாஸ் போடப்பட்டது. அதற்கு முன்பே மாலை 6:00 மணிக்கு கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாக அதிகாரி சுபேந்து கோஷ், என்னிடம் மொபைல் போனில் பேசினார்.

'ஆர்.சி.பி., கோப்பை வென்றுவிடும். நாளை சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வேண்டும்' என்று கேட்டார். நான் முதலில் அனுமதி வழங்கவில்லை.

'ஆனாலும் அனுமதி கேட்டு, கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன், ஆர்.சி.பி., அணியினர் எனக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். பெங்களூரு அணி கோப்பையை வென்றதும், ஆர்.சி.பி., நிர்வாகம், எங்களிடம் எந்த அனுமதியும் பெறாமல், சமூக ஊடகங்களில் வெற்றி அணிவகுப்பு என்று பதிவிட்டனர். இதை பார்த்தே, 4ம் தேதி ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

'ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து வீரர்களை பத்திரமாக அழைத்து வந்தோம். விதான் சவுதாவில் நடந்த நிகழ்ச்சிக்கும் பாதுகாப்பு வழங்கினோம். மைதானம் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆர்.சி.பி., - டி.என்.ஏ., - கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் குழப்பத்தால் தான் நெரிசல் ஏற்பட்டது' என்று புகாரில் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த புகாரை வைத்து பார்த்தால், இறுதி போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெறும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்தது போன்று உள்ளது. இதனால் மேட்ச் பிக்சிங் செய்து, ஆர்.சி.பி., கோப்பையை வென்றதா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

சித்து, சிவா, கோலி மீது புகார்

சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததற்கு, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தான் காரணம் என, பா.ஜ., தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய கோரி, பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் நேற்று, மேல்சபை பா.ஜ., தலைமை கொறடா ரவிகுமார் தலைமையில் புகார் செய்யப்பட்டது.இதற்கிடையில், 'விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்' என, கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் சமூக ஆர்வலர் வெங்கடேஷ் என்பவரும் நேற்று புகார் செய்தார்.



'அரஸ்ட் கோலி'

ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் இறந்ததற்கு வருத்தம் தெரிவித்து, கோலி ஒரே ஒரு இரங்கல் தான் வெளியிட்டார். அதன்பின் அவர் எதுவும் பேசவே இல்லை. எதை பற்றியும் கவலைப்படாமல் மனைவி அனுஷ்கா சர்மாவுடன், அவர் லண்டன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. கோலிக்காக ஆர்.சி.பி., அணி கோப்பை வெல்ல வேண்டும் என்று நினைத்தவர்கள், இப்போது கோலியின் செயலால் வருத்தம் அடைந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் 'அரஸ்ட்கோலி' என்ற ஹேஷ்டேக் டிரண்ட் ஆகி உள்ளது.








      Dinamalar
      Follow us