/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொலையான ஓய்வு டி.ஜி.பி.,க்கு பி.எப்.ஐ., உடன் தொடர்பு?
/
கொலையான ஓய்வு டி.ஜி.பி.,க்கு பி.எப்.ஐ., உடன் தொடர்பு?
கொலையான ஓய்வு டி.ஜி.பி.,க்கு பி.எப்.ஐ., உடன் தொடர்பு?
கொலையான ஓய்வு டி.ஜி.பி.,க்கு பி.எப்.ஐ., உடன் தொடர்பு?
ADDED : ஏப் 23, 2025 07:44 AM

பெங்களூரு : கொலை செய்யப்பட்ட ஓய்வு டி.ஜி.பி., ஓம்பிரகாஷுக்கு, தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்புடன் தொடர்பு இருந்ததாக, அவரது மனைவி பல்லவி 'வாட்ஸாப்' குரூப்பில் அதிர்ச்சி தகவல் பகிர்ந்தது தெரிய வந்துள்ளது.
கர்நாடக முன்னாள் டி.ஜி.பி., ஓம்பிரகாஷ், 68. இவர், கடந்த 20ம் தேதி மாலை வீட்டில் தன் மனைவி பல்லவியால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். பல்லவி கைது செய்யப்பட்டார். மகள் கிருதியிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு, ஒரு 'வாட்ஸாப்' குரூப்பில் பல்லவி, அதிர்ச்சி தகவலை பகிர்ந்து இருந்தார். அவர் பதிவு:
நான் வீட்டில் பிணைய கைதியாக உள்ளேன். எங்கு சென்றாலும் என் கணவர் கண்காணிப்பில் இருக்கிறேன். நீண்டகாலமாக என்னை கணவர் துஷ்பிரயோகம் செய்கிறார்.
ஹோட்டல்களில் இருந்து நான் வாங்கி சாப்பிட்ட உணவுகளில் கூட, என் கணவர் கூறியதால் கலப்படம் செய்யப்பட்டது. என்னை விஷம் வைத்துக் கொல்ல வீட்டில் வேலை செய்பவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது.
ஓம்பிரகாஷை எதிர்த்து கேள்வி கேட்டதால், என் மகள் கிருதியின் நிலை இப்போது மோசமாக உள்ளது. நாங்கள் சாப்பிட்ட உணவு மூலம், எங்கள் சிறுநீரகம் பாதித்து இருக்கலாம்.
ஒரு நாள் நான் சாலையில் நடந்து சென்றபோது, வேனில் வந்த ஒருவர் என் மீது ஏதோ ஒரு பவுடரை வீசினார்.
சிறிது நேரத்தில் உடல் முழுதும் எரிய துவங்கியது. ஓம்பிரகாஷ் சாம்ராஜ்யம் மிக பெரியது. அவர் உண்மையில் பி.எப்.ஐ., உறுப்பினர்.
இதுபற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அவருக்கு ஆயுதமும், பணமும் எங்கிருந்து வருகிறது என்று விசாரிக்க வேண்டும்.
நடிகை ரன்யா ராவ் வழக்கை விட இது ஆபத்தானது. பணம் எல்லாவற்றையும் எளிமையாக மாற்றுகிறது.
ஓம்பிரகாஷ் டி.ஜி.பி.,யாக இருந்த காலகட்டத்தில், அவர் கொடுத்த தொல்லையால் நிறைய போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்தனர். ஆனால் அவர்கள் மன அழுத்தத்தால் இறந்ததாக கூறினர். எனக்கும், என் மகளுக்கும் தற்செயலாக எது நடந்தாலும், அதற்கு கணவர் தான் பொறுப்பு.
இவ்வாறு அவர் பதிவிட்டு இருந்தார்.
இது குறித்தும் சி.சி.பி., போலீசார் விசாரிக்கின்றனர்.

