ADDED : அக் 01, 2026 02:15 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகம் முழுதும் கடந்த 15 நாட்களில், 60 ஆயிரம் பேருக்கு, 'டிஜிட்டல்' ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு உள்ளதாக, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
ஓட்டுநர் உரிமம் பெற, ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன், அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்வர். பின், ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் ஒப்புதல் அளிக் கப்படும்.
அந்த தகவல், விண்ணப்பதாரர் அளித்த மொபைல் போன் எண்ணுக்கு வந்த பின், ஓ.டி.பி., வாயிலாக, டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை, 'பரிவாஹன்' இணையதளத்தில் அல்லது 'எம்.பரிவாஹன்' செயலியின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடந்த 15 நாட்களில், 60 ஆயிரம் ஓட்டுநர் உரிமங்கள், டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
