/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிதிலமடைந்த பள்ளி மாணவியர் விடுதி
/
சிதிலமடைந்த பள்ளி மாணவியர் விடுதி
ADDED : அக் 30, 2025 11:10 PM

பங்காருபேட்டை:  பங்கார்பேட்டையின் சூளிகுண்டே கிராமத்தில் சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி மாணவியர் விடுதி முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
பங்கார்பேட்டையின் சூளிகுண்டே கிராமத்தில் பள்ளி மாணவியருக்கான விடுதி உள்ளது. இந்த விடுதியில் 50 மாணவியர் தங்கி, பல்வேறு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஏழை தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் பிள்ளைகள்.
சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விடுதியில் போதுமான வசதிகள் இல்லை என்று மாணவியர் புகார் கூறுகின்றனர். கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. மாணவியர் பீதியுடன் உள்ளனர்.
பராமரிப்புப் பணியே மேற்கொள்ளாததால், மழை பெய்யும் போதெல்லாம் விடுதியில் நீர் கசிவு ஏற்படுகிறது. கூரையில் உள்ள சிமென்ட் காரை பெயர்ந்து விழுகிறது. கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து சமூக நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமாரி கூறுகையில், ''விடுதி மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. மானியம் கிடைத்தவுடன் அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

