தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரில் 13ம் தேதி ஆலோசனை 

 காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரில் 13ம் தேதி ஆலோசனை 

 காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரில் 13ம் தேதி ஆலோசனை 


ADDED : ஆக 06, 2026 11:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 11:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: அமைச்சர் பதவி கிடைக்காதால் அதிருப்தியில் இருக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 13ம் தேதி பெங்களூரில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் கடந்த 3ம் தேதி நடந்தது. புதிதாக 19 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இம்முறையும் மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

இதனால், 35 - 40 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மேலிடம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். சிலர் ராஜினாமா செய்யும் முடிவிலும் இருந்தனர்.

அதிருப்தியாளர்களை, கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, முதல்வர் சிவகுமார், காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் இரவு உணவு விருந்து என்ற பெயரில், வரும் 13ம் தேதி பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது; அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது உட்பட, பல விஷயங்களை பற்றி அந்த சந்திப்பின் போது விவாதிக்க உள்ளனர்.

இதற்கிடையில், தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த சில எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் முதல்வர் சித்தராமையா மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, சித்தராமையா எங்களுக்கு எப்படியாவது அமைச்சர் பதவி வாங்கி தருவார் என்று நினைத்திருந்தோம். ஆனால், அவர் அனுப்பிய பட்டியலில் எங்கள் பெயர்கள் இல்லவே இல்லை; நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்று அமைச்சர் பதவிக்கு வராத எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர்.

சித்தராமையாவுக்கு ஆதரவாக இருந்ததால் தான், எனக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது என்று, பங்கார்பேட் எம்.எல்.ஏ., நாராயணசாமி பகிரங்கமாக கூறியுள்ளார்.

'எனக்கு அமைச்சர் பதவி தருவதாக, மூன்று முறை சித்தராமையா உறுதி அளித்தார். ஆனாலும் பதவி கிடைக்கவில்லை' என்று, ஆலந்த் எம்.எல்.ஏ., - பி.ஆர்.பாட்டீலும் பகிரங்கமாக பேசி இருக்கிறார். இது சித்தராமையாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us