அதிகாரிகள், ஊழியர்கள் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
அதிகாரிகள், ஊழியர்கள் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : ஆக 06, 2026 11:34 PM
பெங்களூரு: 'அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களின் சொத்து விபரங்களை தெரிவிப்பது கட்டாயம்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, ஊழியர் மற்றும் நிர்வாக மேம்பாட்டு துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியதாவது:
அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஆகஸ்ட் 20ம் தேதி முதல், ஆண்டின் செயல் திறன் மதிப்பீட்டு அறிக்கை, அசையா சொத்துகள் பற்றிய தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு முன் இந்த நடைமுறை, கையேடு மூலமாக நடந்தது. இதனால் அதிக நேரம் செலவானது. கஷ்டமாகவும் இருந்தது. தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகியதால். ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்காக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் 2025 - 26ம் ஆண்டின் தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இனி ஆண்டு தோறும், மார்ச் இறுதிக்குள் இந்த நடைமுறைபடி, தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
