தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மகப்பேறு மருத்துவமனைகளை ஜி.பி.ஏ., மூடியதால் அதிருப்தி

 மகப்பேறு மருத்துவமனைகளை ஜி.பி.ஏ., மூடியதால் அதிருப்தி

 மகப்பேறு மருத்துவமனைகளை ஜி.பி.ஏ., மூடியதால் அதிருப்தி


ADDED : ஜன 04, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மேம்பாட்டு பணிகளை காரணமாக காண்பித்து, பெங்களூரின் பல்வேறு பிரசவ மருத்துவமனைகளை, ஜி.பி.ஏ., மூடியள்ளதால், ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பாதிப்படைந்து உள்ளனர்.

பெங்களூரின் பல இடங்களில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் நடத்தும் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இந்த மருத்துவமனைகளை ஏழைகள், கூலித்தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணியர் நம்பியுள்ளனர்.

பெங்களூரில், 28 பிரசவ மருத்துவமனைகள் உள்ளன. மேம்பாட்டு பணிகள் நடக்கவுள்ளதாக கூறி, ஏழைகள் அதிகம் வசிக்கும் கெம்பேகவுடா நகர், சாம்ராஜ்பேட், சாந்தி நகர், திம்மையா சாலை, ஜெயநகர், ஆடுகோடி, எடியூர், ஆசாத் நகர், யஷ்வந்த்பூர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால், பொது மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். தனியார் மருத்துவமனைகளின் நெருக்கடிக்கு பணிந்துள்ளதாக, அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

வாக்குறுதி திட்டங்களுக்கு அதிகமான பணம் செலவிடுவதால், மருத்துவமனைகளை நிர்வகிக்க பணமில்லையா என்றும், பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us