2 மாதத்தில் பாழான சாலை ஒப்பந்ததாரர் மீது அதிருப்தி
2 மாதத்தில் பாழான சாலை ஒப்பந்ததாரர் மீது அதிருப்தி
ADDED : மே 30, 2026 02:27 AM

பங்கார்பேட்டை: பங்கார்பேட்டையின் காடு கதிரேனஹள்ளி முதல் மராத்தா ஹொசஹள்ளி வரை 1 கி.மீ., சாலையில் தார் போடும் பணி நிறைவடைந்து இரண்டு மாதங்களுக்குள், அந்த சாலை முற்றிலுமாக பெயர்ந்து, ஜல்லி சாலையாக மாறியுள்ளது.
பங்கார்பேட்டை தொகுதி ஊரக வளர்ச்சி பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி, 40 லட்சம் ரூபாயில், 1 கிலோ மீட்டர் சாலைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சாலைப்பணி முடிந்து, இரண்டு மாதங்களில் பெயர்ந்து நாசமாகி உள்ளது. ஜல்லி சாலையாக காணப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்ப விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை; தரம் குறைந்த பொருட்களால் சாலையை அமைத்துள்ளனர். சாலையின் இருபுறமும் ஜல்லிகற்கள் சிதறி கிடப்பதால், இப்பகுதியினர், வாகனங்களை இயக்க முடியாமல் தடுமாறி கீழே விழுகின்றனர்.
அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, தரமற்ற பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
