/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காக விவாகரத்தா? ஐகோர்ட்டில் கணவரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
/
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காக விவாகரத்தா? ஐகோர்ட்டில் கணவரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காக விவாகரத்தா? ஐகோர்ட்டில் கணவரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காக விவாகரத்தா? ஐகோர்ட்டில் கணவரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
ADDED : நவ 07, 2025 11:00 PM
பெங்களூரு: 'ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு விவாகரத்து வழங்க முடியாது' என்று கூறிய கர்நாடக உயர் நீதிமன்றம், கணவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் ஒரு தம்பதி வசிக்கின்றனர். இவர்களுக்கு, 2009ல் திருமணம் நடந்தது. 10ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.
மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து தரும்படி, குடும்பநல நீதிமன்றத்தில், கணவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார்.
இம்மனு மீது, நீதிபதிகள் ஜெய்ந்த் பானர்ஜி, உமேஷ் அடிகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணை நடந்தது.
கணவர் தரப்பு வக்கீல் முன்வைத்த வாதம்:
என் மனுதாரருக்கு, அவரது பெற்றோர் நெருக்கடியால் திருமணம் செய்து கொண்டார். மனைவியோ வீட்டை சுத்தம் செய்யாமல், பல நாட்கள் துாங்குவார்.
சமைக்கும்படி கூறினால், மடிக்கணினியை வைத்துக் கொண்டு, அலுவலக பணி இருப்பதால், கணவரின் தாய் சமைக்க வேண்டும் என்று எதிர்மனுதாரர் வற்புறுத்தி உள்ளார்.
ஒவ்வொரு நாளும் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடும்படி கூறுவார். இல்லையெனில் சண்டைபோடுவார்.
வேலை இருந்தாலும், பணம் செலவழிக்காமல் ஒவ்வொரு நாளும் பழங்களை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துவார். அடிக்கடி ஷாப்பிங் செய்ய வரும்படி கணவரை கட்டாயப்படுத்தி வந்தார்.
மனுதாரர் மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது, தாய் வீட்டுக்கு சென்றார். குழந்தை பிறந்து ஓராண்டு ஆன பின்னரும் வரவில்லை. வீடு திரும்புமாறு சட்டப்படி அறிவிப்பு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.
இருப்பினும், என் மனுதாரர் மீது வரதட்சணை புகார் அளிப்பதாக மிரட்டி, சித்ரவதை செய்துள்ளார். குடும்ப நீதிமன்றம் மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து, விவாகரத்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்மனுதாரர் வக்கீல் வாதிட்டதாவது:
எதிர்மனுதாரரின் கணவர், பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திருமணத்தின்போது 3.5 லட்சம் ரூபாய் ரொக்கமாக வரதட்சணை வழங்கி, 12 லட்சம் ரூபாய் செலவழித்து திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இருப்பினும் அவர், தன் கணவரால் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளார். கணவர் பொறுப்பற்றவராக இருந்தார். குழந்தையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. அவரது கணவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
அவருக்கு 10ம் வகுப்பு படிக்கும் மகள் இருந்தும், அவரின் கல்விக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனவே, அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதை கேட்டறிந்த நீதிபதிகள் ஜெய்ந்த் பானர்ஜி, உமேஷ் அடிகா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:
மனுதாரரின் கணவருக்கு, தன் மனைவி பிரசவத்துக்காக சொந்த ஊருக்கு சென்றபோது, எத்தனை மாதம் கர்ப்பமாக இருந்தார் என்று கூட தெரியாது என்கிறார்.
குழந்தை எப்போது பிறந்தது, குழந்தைக்கு என்ன வயது என்பதும் தெரியாது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழில் குறிப்பிட்டுள்ள குழந்தையின் பிறந்த தேதி அவருக்கு தெரியாது.
பல நிறுவனங்களில் பணிபுரிந்ததாக கூறினாலும், தற்போது எந்த வேலையும் செய்ய ஆர்வம் காட்டவில்லை.
கணவர் மீது மனைவி புகார் அளித்ததாக கூறுகிறார். ஆனால், அவர் மீது எந்த புகாரும் பதிவாகவில்லை.
இருப்பினும், மனைவியின் பெற்றோர், கணவர் வீட்டு முன் சண்டை போட்டதால், புகார் பதிவாகி உள்ளது.
கணவர் வீட்டுக்கு வருவேன் என மனைவி கூறியுள்ளார். ஆனால், கணவருக்கோ, மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கூறுகிறார்.
மனைவி கொடுப்படுத்துவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. கணவரின் குற்றச்சாட்டுகளை நம்ப முடியாது. எனவே, கணவரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

