/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
செலுவாம்பா அரசு மருத்துவமனையில் குளறுபடிகள் குழந்தைகள் உரிமைகள் ஆணைய சோதனையில் அம்பலம்
/
செலுவாம்பா அரசு மருத்துவமனையில் குளறுபடிகள் குழந்தைகள் உரிமைகள் ஆணைய சோதனையில் அம்பலம்
செலுவாம்பா அரசு மருத்துவமனையில் குளறுபடிகள் குழந்தைகள் உரிமைகள் ஆணைய சோதனையில் அம்பலம்
செலுவாம்பா அரசு மருத்துவமனையில் குளறுபடிகள் குழந்தைகள் உரிமைகள் ஆணைய சோதனையில் அம்பலம்
ADDED : நவ 07, 2025 11:00 PM

மைசூரு: செலுவாம்பா மருத்துவமனையில், குழந்தைகளின் சிகிச்சைக்கு தேவையான வசதிகள் பற்றாக்குறை உள்ளது. ஒரே வார்மரில் இரண்டு பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பதை, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கண்டித்துள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், கர்நாடக உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சசிதர் கோசும்பே, உறுப்பினர் திப்பேசாமி ஆகியோர், நேற்று முன் தினம், மைசூரு நகரில் உள்ள செலுவாம்பா மருத்துவமனைக்கு, திடீர் வருகை தந்து ஆய்வு செய்தனர். பல குளறுபடிகள் இருப்பதை கண்டு, கோபமடைந்தனர்.
இம்மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒரு குழந்தையும் சேர்க்கப்படவில்லை என்பது, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் ஆய்வில் தெரிந்தது.
அந்த மையத்தின் சமையல் அறை பயன்படுத்தப்படவே இல்லை.
வெளி நோயாளிகள் இருவர் அங்கு ஓய்வெடுத்தது தெரிய வந்தது.
இதுகுறித்து, மருத்துவமனை அதிகாரிகளிடம், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சசிதர் கேள்வி எழுப்பினார். பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
செலுவாம்பா மருத்துவமனையின், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில், அதிகமான குழந்தைகள் இருந்தன. ஒரு வார்மரில் இரண்டு குழந்தைகளை வைத்திருப்பதை கண்டு, ஆணைய தலைவர் சசிதர் கோபமடைந்து, அதிகாரிகளை கண்டித்தார்.
அவர் கூறியது:
ஒரே வார்மரில் இரண்டு குழந்தைகளை வைத்திருப்பதால், தொற்று பரவும் அபாயம் உள்ளது. பாதுகாப்பானது இல்லை. சிறார்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க, அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இத்திட்டங்கள் சிறார்களை சென்றடைகின்றனவா என்பதை, உறுதி செய்து கொள்வது, அதிகாரிகளின் கடமை.
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில், ஒரு சிறாரும் காணப்படவில்லை. இது அரசின் சலுகைகள், சிறார்களுக்கு கிடைக்கவில்லை என்பதை காட்டுகிறது.
இவ்வாறு அவர் அதிருப்தி தெரிவித்தார்.
பொறுப்புடன் நடந்து சிறார்களுக்கு சிகிச்சையளிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

