/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2வது பெங்., திறன் மாநாடு தேதி அறிவிப்பு 2026 அக்., 3 முதல் 5 வரை நடக்கிறது
/
2வது பெங்., திறன் மாநாடு தேதி அறிவிப்பு 2026 அக்., 3 முதல் 5 வரை நடக்கிறது
2வது பெங்., திறன் மாநாடு தேதி அறிவிப்பு 2026 அக்., 3 முதல் 5 வரை நடக்கிறது
2வது பெங்., திறன் மாநாடு தேதி அறிவிப்பு 2026 அக்., 3 முதல் 5 வரை நடக்கிறது
ADDED : நவ 07, 2025 05:48 AM
பெங்களூரு: முதலாம் ஆண்டு பெங்களூரு திறன் மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், இரண்டாவது திறன் மாநாடு, அடுத்த ஆண்டு அக்டோபர் 3 முதல் 5ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
கர்நாடக அரசின் திறன் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், முதல் முறையாக பெங்களூரு திறன் மாநாடு - 2025 கடந்த 4 ம் தேதி, குமாரகிருபா சாலையில் உள்ள தி லலித் அசோக் ஹோட்டலில் துவங்கியது.
நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் சாதக, பாதகம் குறித்து மைக்ரோசாப்ட் இந்தியா முன்னாள் தலைவர் ரவி வெங்கடேசன் எடுத்துரைத்தார்.
தொழில்நுட்பம், எரிசக்தி உட்பட பல துறைகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இளைஞர்களை வேலைவா ய்ப்பு உருவாக்குவோராக மாற்றுவது எப்படி என்பது குறித்து, தொழில் முனைவோர் தங்களது அனுபவங்களை எடுத்து கூறினர்.
அதிநவீன பயிற்சி தீர்வுகள், தொழில்நுட்பங்களை காட்டும் திறன் கண்காட்சி அரங்கு திறக்கப்பட்டது. இதில் இடம்பெற்றிருந்த ரோபோ அரங்கு பார்வையாளர்களை கவர்ந்தது. மற்ற அரங்குகளில் இடம்பெற்றிருந்த தொழில்நுட்பங்களை மாணவர்கள், பார்வையாளர்கள் ஆர்வமாக கேட்டனர். மூன்று நாட்கள் நடந்த மாநாடு நேற்றுடன் நிறைவு பெற்றது.
மாநாட்டிற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், இரண்டாவது ஆண்டு மாநாடு அடுத்த ஆண்டு அக்டோபர் 3 முதல் 5ம் தேதி வரை நடக்க உள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த, 'ட்ரெஸ்கான்' நிறுவனத்திற்கும், திறன் மேம்பாட்டு ஆணைய தலைவர் சிவகாந்தம்மா நாயக்கிற்கும், திறன் மேம்பாட்டு அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் அரசு சார்பில் நன்றி தெரிவித்தார்.

