/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்.,கில் 2 நாள் நிகழ்ச்சி மோகன் பகவத் பங்கேற்பு
/
பெங்.,கில் 2 நாள் நிகழ்ச்சி மோகன் பகவத் பங்கேற்பு
ADDED : நவ 07, 2025 05:48 AM

பெங்களூரு: பெங்களூரில் நாளை, நாளை மறுநாள் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தில், அதன் தலைவர் மோகன் பகவத் பங்கேற்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, பெங்களூரு ஒசகெரேஹள்ளியில் உள்ள பி.இ.எஸ்., பல்கலைக்கழகத்தில் நாளை, நாளை மறுநாள், நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் நடக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பங்கேற்கிறார். இரண்டு நாட்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்க கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளாவை சேர்ந்த 1,200 பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பல துறைகளை சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
நாளை மாலை 4:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை இரண்டு அமர்வுகளாக, மோகன் பகவத் கலந்துரையாடல் நடத்துகிறார். நாளை மறுநாள் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும் கலந்துரையாடல் நடத்துகிறார்.

