/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருநெல்வேலி - ஷிவமொக்காவுக்கு செப்., 7 முதல் தீபாவளி சிறப்பு ரயில்
/
திருநெல்வேலி - ஷிவமொக்காவுக்கு செப்., 7 முதல் தீபாவளி சிறப்பு ரயில்
திருநெல்வேலி - ஷிவமொக்காவுக்கு செப்., 7 முதல் தீபாவளி சிறப்பு ரயில்
திருநெல்வேலி - ஷிவமொக்காவுக்கு செப்., 7 முதல் தீபாவளி சிறப்பு ரயில்
ADDED : செப் 03, 2025 09:59 AM
பெங்களூரு : 'தசரா, தீபாவளி, சாத் பண்டிகையை முன்னிட்டு, பயணியர் வசதிக்காக, திருநெல்வேலி - ஷிவமொக்கா இடையே வரும் 7ம் தேதி முதல் அக்., 26ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
ரயில் எண் 06103: திருநெல்வேலி - ஷிவமொக்கா டவுன் சிறப்பு ரயில், வரும் 7ம் தேதி முதல் அக்., 26ம் தேதி வரை, திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 3:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1:00 மணிக்கு ஷிவமொக்கா டவுன் வந்தடையும்.
மறுமார்க்கத்தில் எண் 06104: ஷிவமொக்கா டவுன் - திருநெல்வேலி சிறப்பு ரயில், வரும் 8ம் தேதி முதல் அக்., 27ம் தேதி வரை ஷிவமொக்கா டவுனில் இருந்து திங்கட்கிழமை தோறும் மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்
எண் 05951: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - நியூ டின்சுக்யா சிறப்பு ரயில், செப். , 22ம் தேதி முதல் நவ., 3ம் தேதி வரை எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் அதிகாலை 12:05 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை மாலை 4:25 மணிக் கு நியூ டின்சுக்யா சென்றடையும்.
மறு மார்க்கத்தில் எண் 05952: நியூ டின்சுக்யா - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், செப்., 18ம் தேதி முதல் அக்., 30ம் தேதி வரை, நியூ டின்சுக்யாவில் இருந்து வியாழக்கிழமை தோறும் மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு வந்தடையும்.
நிற்காது சன்னசந்திராவில் நடைமேடை மற்றும் நடைபாதை மேம்பாலப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் ரயில் எண்கள் 66559 / 66560: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - அனந்தகுமார் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு 'மெமு' ரயிலும்; எண்கள் 66591 / 66592: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - கோலார் - பெங்களூரு கன்டோன்மென்ட் 'டெமு' ரயில்கள், நவ., 30ம் தேதி வரை சன்னசந்திரா ரயில் நிலையத்தில் நிற்காது.
நீட்டிப்பு எண் 03241: தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வாரத்தில் இரண்டு நாட்கள் இயங்கும் சிறப்பு ரயில், செப்., 19 முதல் டிச., 29ம் தேதி வரை நீட்டிப்பு
எண் 03242: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூர் வாரத்தில் இரண்டு நாட்கள் இயங்கும் சிறப்பு ரயில், செப்., 21 முதல் டிச., 29 வரை நீட்டிப்பு
எண் 03247: தானாபூர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில், செப்., 18 முதல் டிச., 25 வரை நீட்டிப்பு
எண் 03248: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - தானாபூர் வாராந்திர சிறப்பு ரயில், செப்., 20 முதல் டிச., 27 வரை நீட்டிப்பு
எண் 06539: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - பீதர் வாரத்தில் இரண்டு நாட்கள் இயங்கும் சிறப்பு ரயில், அக்., 3 முதல் 31 வரை நீட்டிப்பு
எண் 06540: பீதர் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வாரத்தில் இரண்டு நாட்கள் இயங்கும் சிறப்பு ரயில், அக்., 4 முதல் நவ., 1 வரை நீட்டிப்பு
எண் 06529: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - கோம்டி நகர் வாராந்திர விரைவு ரயில், நவ., 10 முதல் டிச., 22 வரை நீட்டிப்பு
எண் 06530: கோம்டி நகர் - எம்.எம்.வி.டி., பெங்களூரு வாராந்திர விரைவு ரயில், நவ., 14 முதல் டிச., 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.