தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு, விஜயபுராவுக்கு தீபாவளி சிறப்பு ரயில்

பெங்களூரு, விஜயபுராவுக்கு தீபாவளி சிறப்பு ரயில்

பெங்களூரு, விஜயபுராவுக்கு தீபாவளி சிறப்பு ரயில்


ADDED : அக் 11, 2025 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2025 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:தீபாவளியை முன்னிட்டு, கூட்ட நெரிசலை சமாளிக்கும் நோக்கில் பெங்களூரு - ஹூப்பள்ளி - விஜயபுரா இடையே, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து, தென்மேற்கு ரயில்வேத்துறை வெளியிட்ட அறிக்கை:

தீபாவளி பண்டிகை என்பதால், வெளியூர்களுக்கு செல்லும் பயணியர் எண்ணிக்கை அதிகம் இருக்கும்.

பயணியர் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பெங்களூரு - ஹூப்பள்ளி - விஜயபுரா இடையே, சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஹூப்பள்ளியில் இருந்து, 07345 எண் கொண்ட சிறப்பு ரயில் இன்று காலை 11:00 மணிக்கு புறப்பட்டு, இரவு 8:00 மணிக்கு பெங்களூரின் விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தை அடையும்.

ஹாவேரி, ஹரிஹரா, தாவணகெரே, அரசிகெரே, துமகூரு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

பெங்களூரில் இருந்து 06245 எண் கொண்ட சிறப்பு ரயில் 17ம் தேதி இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2:05 மணிக்கு விஜயபுராவை அடையும். மறுமார்க்கத்தில் விஜயபுராவில் இருந்து 22ம் தேதி இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:15 மணிக்கு பெங்களூரை அடையும்.

இரண்டு ரயில்களும், துமகூரு, அரசிகெரே, பீருரு, சிக்கஜாஜூர், சித்ரதுர்கா, ராயதுர்கா, பல்லாரி கண்டோன்மென்ட், தோரணகல்லு, ஹொஸ்பேட், கொப்பால், கதக், பாதாமி, பாகல்கோட், அலமாட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us