ADDED : பிப் 03, 2026 06:02 AM

பெங்களூரு: கர்நாடக மாநில தி.மு.க., முப்பெரும் விழாவில், கட்சியின் மூத்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
தி.மு .க., தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில், அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பிறந்தநாள் விழா, தி.மு.க., துவக்க நாள் என முப்பெரும் விழா, பெங்களூரு தமிழ் சங்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொது செயலர் நா.ராமசாமி தலைமையில் நடந்த விழாவில், சுதந்திரநகர் நா.ஏமாவதி சண்முகம், சிக்கபிதரகல்லுஎஸ்.சிவசங்கரன், சகாயபுரம் கே.கணேசன்; மடிவாளா ரா.மா.செல்வம், வண்ணார்பேட்டை ஜான் ரபேல்; மைசூருரகுபதி; தங்கவயல் பா.மணிவண்ணன்; முத்துமணி நன்னன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப் பட்ட ன.
காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத், தி.மு.க.,வின் தமிழ்தாசன், போர்முரசு கதிரவன், ஆனந்தராஜ், கருணாநிதி, சுந்தரேசன், முருகானந்தம், பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தங்கவயல், பத்ராவதி, மைசூரு, ஷிவமொக்கா, மங்களூரு தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.

