தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண்ணை பலாத்காரம் செய்து மிரட்டிய டாக்டர் மீது வழக்கு

 பெண்ணை பலாத்காரம் செய்து மிரட்டிய டாக்டர் மீது வழக்கு

 பெண்ணை பலாத்காரம் செய்து மிரட்டிய டாக்டர் மீது வழக்கு


ADDED : செப் 08, 2026 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 04:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு சஹகார நகரில் உள்ள நோயறியதல் மையத்தின் டாக்டர் யுவராஜ் மனோகர், 55. இதே மையத்தில் 30 வயது இளம்பெண்ணும் வேலை செய்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 15 ம் தேதி இவர்கள் இருவரும் மையத்தில் இருந்தனர்.

அப்போது மையத்தின் சில கோப்புகளை தேடும் சாக்கில் இளம்பெண்ணுக்கு, யுவராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது முகத்தில் 'பெப்பர் ஸ்பிரே' யை யுவராஜ் அடித்துள்ளார். மயங்கி விழுந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்துள்ளார். வீடியோ காண்பித்து மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்ததுடன், பெண்ணின் ஜாதியை சொல்லியும் திட்டியுள்ளார்.

இதுகுறித்து பெண் அளித்த புகாரில் யுவராஜ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கொடிகேஹள்ளி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us