sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எலும்பு முறிவு ஆப்பரேஷன் செய்த டாக்டர் எம்.எல்.ஏ.,

எலும்பு முறிவு ஆப்பரேஷன் செய்த டாக்டர் எம்.எல்.ஏ.,

எலும்பு முறிவு ஆப்பரேஷன் செய்த டாக்டர் எம்.எல்.ஏ.,


ADDED : ஜூலை 10, 2025 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2025 11:07 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: தன் தொகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு, கை எலும்பு முறிவுக்கு, டாக்டரான குனிகல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத் அறுவை சிகிச்சை செய்தார்.

துமகூரு மாவட்டத்தின் குனிகல் தாலுகாவின் அம்மத்துார் அருகில் உள்ள தொட்டகல்லஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் பரமேஷ், 37. இவர் சில நாட்களுக்கு முன்பு, பைக்கில் சென்றபோது விபத்து நேர்ந்தது. இதில் அவரது கை எலும்பு முறிந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

பொருளாதார பிரச்னையால், அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. எனவே குனிகல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத்தை சந்தித்து உதவி கேட்டார்.

அரசியல்வாதியாக இருந்தாலும், தொழிலில் டாக்டரான ரங்கநாத், பரமேஷுக்கு, தானே அறுவை சிகிச்சை செய்ய முன் வந்தார். அவரை உடனடியாக பெங்களூரின் பவுரிங் மருத்துவமனையில் சேர்த்தார். பரமேஷுக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்தார். அவர் நலமாக உள்ளார்.

எம்.எல்.ஏ., ரங்கநாத் மனிதநேயத்தை பலரும் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us