/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சர்வே குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்: ஜெகதீஷ்
/
சர்வே குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்: ஜெகதீஷ்
ADDED : செப் 30, 2025 05:39 AM

பெங்களூரு: ''ஜாதி வாரி சர்வே விஷயத்தில் வதந்திகளை பொருட்படுத்தாதீர்கள்,'' என, பெங்களூரு நகர் மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெங்களூரு நகர் மாவட்டத்திலும், ஜாதி வாரி சர்வே நடந்து வருகிறது. பொது மக்களில் சிலர், தங்களின் பி.பி.எல்., ரேஷன்கார்டை ரத்து செய்ய, சர்வேதாரர் வந்துள்ளதாக தவறாக நினைக்கின்றனர். சர்வே எடுக்க வருவோர் கேட்கும் தகவல்களை தெரிவிக்க மறுக்கின்றனர்.
பொது மக்கள் சரியான தகவல்களை தெரிவிக்காத காரணத்தால், சர்வே நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சர்வே நடத்துவது மாநில அரசின் முக்கியமான திட்டமாகும். பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் உட்பட, அனைத்து புள்ளி விபரங்களையும், சேகரிக்கும் நோக்கில் இந்த சர்வே நடத்தப்படுகிறது.
சமுதாயங்களுக்கு இடையிலான, பொருளாதாரம், கல்வி ஏற்றத்தாழ்வுகளை, சரி செய்வது அரசின் எண்ணமாகும். மக்கள் தவறான வதந்திகளை நம்ப வேண்டாம். சர்வே வெற்றிகரமாக நடந்து முடிய, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.