அமைதியாக இருக்கிறேன் என நினைக்காதீர் முன்னாள் முதல்வர் சித்தராமையா சூசகம்
அமைதியாக இருக்கிறேன் என நினைக்காதீர் முன்னாள் முதல்வர் சித்தராமையா சூசகம்
ADDED : ஆக 15, 2026 11:31 PM

பெங்களூரு: ''பேசாமல் இருக்கிறேன் என்பதற்காக, அமைதியாக இருக்கிறேன் என அர்த்தமில்லை,” என, முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.
சுதந்திர போராட்ட வீரரான கிராந்தி வீர சங்கொல்லி ராயண்ணாவின் பிறந்த நாளையொட்டி, பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு அருகில் அவரது சிலைக்கு மலர் துாவி, முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று மரியாதை செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றேன். புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். ராயண்ணாவுக்கு மரியாதை செய்கிறேன்.நான் எங்கே மவுனமாக இருந்தேன்... நான் அதிகம் பேசுவதில்லை. அதற்கு காரணம் நான் முதல்வர் கிடையாது. அதனால், எனக்கு எந்த பொறுப்பும் இல்லை. நான் பேசாமல் இருக்கிறேன் என்பதற்காக, அமைதியாக இருக்கிறேன் என அர்த்தமில்லை.
அமைச்சரவையில் பெண்களுக்கு இடமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்க, பா.ஜ.,வுக்கு என்ன தகுதி உள்ளது. பா.ஜ., அமைச்சரவையில் சிறுபான்மையினருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அமைச்சரவையில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறேன்.
அஹிந்தா இயக்கத்தின், 25வது ஆண்டு விழாவுக்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
