தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'பழங்களை பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தாதீர்'

 'பழங்களை பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தாதீர்'

 'பழங்களை பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தாதீர்'


ADDED : ஆக 25, 2026 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 01:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சுகாதார அமைச்சர் காதர் அளித்த பேட்டி:

செயற்கை பனீருக்கு ஓராண்டு மட்டுமே தடை விதிக்கும் அதிகாரம் உணவு பாதுகாப்பு துறை கமிஷனருக்கு இருக்கிறது. நிரந்தர தடை விதிப்பது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

வாழைப்பழம், சப்போட்டா, மாம்பழம் உள்ளிட்டவற்றை பழுக்க வைப்பதற்கு ரசாயனங்கள் பயன்படுத்துவதை வியாபாரிகள் நிறுத்த வேண்டும். போலி மருந்துகள் குறித்து எஸ்.ஐ.டி., தகவலை சேகரிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் போலி மருந்துகள் பயன்படுத்தப்படவில்லை.

கர்நாடகாவில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கிறது.

குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்தால் அலட்சியம் செய்ய வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகவும்.

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பக்கூடாது. பன்றிக்காய்ச்சல் தொடர்பாக பள்ளிகளுக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us