பா.ஜ.,வுக்கு ஓட்டு போடாதீங்க காங்கிரஸ் எம்.எல்.ஏ., கெஞ்சல்
பா.ஜ.,வுக்கு ஓட்டு போடாதீங்க காங்கிரஸ் எம்.எல்.ஏ., கெஞ்சல்
ADDED : மார் 25, 2026 07:03 AM

தாவணகெரே: தாவணகெரே தெற்கு தொகுதியில், பா.ஜ.,க்கு ஓட்டு போடாதீர்கள் என, முஸ்லிம் சமூகத்தினரிடம், சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் கெஞ்சி உள்ளார்.
பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:
தாவணகெரே தெற்கில் முஸ்லிம் சமூகத்திற்கு சீட் கிடைக்கவில்லை என்பதால், அச்சமூக தலைவர்கள் கோபத்தில் இருப்பது எனக்கு புரிகிறது. அடுத்த தேர்தல்களில் அவர்களுக்கு ஏதாவது வாய்ப்பு வழங்கப்படலாம்.
சிறுபான்மை சமூகத்தினரை காங்கிரசால் மட்டுமே பாதுகாக்க முடியும். காங்கிரஸ் வேட்பாளர் சமர்த், 27 வயது இளைஞர். மக்களுக்கு சேவையாற்ற வருகிறார். அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
சபாநாயகர், அமைச்சர், எம்.எல்.சி., பதவிகள், முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்து உள்ளன. திருப்திபடுத்தும் அரசியல் செய்வதாக எங்களை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. காங்கிரசின் ஒரே குறிக்கோள், முஸ்லிம் சமூகத்தையும் அரசியல் ரீதியாக வளர்ப்பது தான்.
நானும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து தான் வந்துள்ளேன். இளைஞர்கள் நிறைய பேர் அரசியலுக்கு வர வேண்டும்.
பா.ஜ., வேட்பாளர் சீனிவாஸ் தாஸ் கரியப்பாவின் தந்தை கரியப்பாவும் அரசியலில் இருந்தவர். இதனால், குடும்ப அரசியல் பற்றி பேச பா.ஜ.,வுக்கு தகுதி இல்லை.
முஸ்லிம் குடும்ப பெண்களை பா.ஜ., தலைவர்கள் நிறைய முறை அவமதித்து உள்ளனர். அதனை எல்லாம் நினைவில் வைத்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் பா.ஜ.,க்கு ஓட்டு போடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
