sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மக்கள் பிரச்னைகள் புரியவில்லையா? துணை முதல்வருக்கு பா.ஜ., கேள்வி

/

மக்கள் பிரச்னைகள் புரியவில்லையா? துணை முதல்வருக்கு பா.ஜ., கேள்வி

மக்கள் பிரச்னைகள் புரியவில்லையா? துணை முதல்வருக்கு பா.ஜ., கேள்வி

மக்கள் பிரச்னைகள் புரியவில்லையா? துணை முதல்வருக்கு பா.ஜ., கேள்வி


ADDED : மே 29, 2025 10:57 PM

Google News

ADDED : மே 29, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர மேம்பாட்டு ஆணையத்தின் திறன் இன்மையால், மக்கள் அவதிப்படுகின்றனர். பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சரான உங்களுக்கு, மக்களின் கஷ்டம் புரியவில்லையா' என, துணை முதல்வர் சிவகுமாருக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து சிவகுமாருக்கு, அவர் எழுதிய கடிதம்:

பி.டி.ஏ., லே - அவுட்களில் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை உள்ளது. மனை உரிமையாளர்களால் வீடு கட்ட முடியவில்லை. இதன் விளைவாக 40 சதவீதம் மனைகள் காலியாக உள்ளன.

ஏற்கனவே உள்ள லே - அவுட்களில், அடிப்படை வசதிகள் இல்லை. இச்சூழ்நிலையில் புதிய லே - அவுட்டுகள் அமைக்க வேண்டியது அவசியமா.

சிவராம் காரந்த் லே - அவுட்டில், 30,000 மனைகள் வழங்குவதற்கு முன்பே, இரண்டாவது கட்ட லே - அவுட் அமைக்க, சர்வே துவங்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, விஸ்வேஸ்வரய்யா லே - அவுட், கெம்கேகவுடா லே - அவுட், அர்க்காவதி லே - அவுட்கள் அமைக்க, பொதுமக்கள், விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு, இதுவரை நிவாரணம் வழங்கவில்லை.

லே - அவுட்களை முழுமையான அளவில் மேம்படுத்தவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல், வீடு கட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த லே - அவுட்களில் 30 முதல் 40 சதவீதம் மனைகள், வீடு கட்டாமல் காலியாக உள்ளன. புதிய லே - அவுட்கள் அமைக்க தேவையில்லை.

பழைய லே - அவுட்களில், மக்களுக்கு தேவையான சாலை, சாக்கடை, குடிநீர், மின்சாரம் உட்பட, மற்ற அடிப்படை வசதிகளை செய்து முடித்த பின், புதிய லே - அவுட் அமைக்கலாம். பழைய லே - அவுட்களில் வீடுகளை வழங்க வேண்டும்.

திறன் இன்மையால், மக்கள் அவதிப்படுகின்றனர். பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சரான உங்களுக்கு, மக்களின் கஷ்டம் புரியவில்லையா.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us