/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வீடு வீடாக போலீஸ் திட்டம் துவக்கம் போலீசாரிடம் பிரச்னைகளை கூற அனுமதி
/
வீடு வீடாக போலீஸ் திட்டம் துவக்கம் போலீசாரிடம் பிரச்னைகளை கூற அனுமதி
வீடு வீடாக போலீஸ் திட்டம் துவக்கம் போலீசாரிடம் பிரச்னைகளை கூற அனுமதி
வீடு வீடாக போலீஸ் திட்டம் துவக்கம் போலீசாரிடம் பிரச்னைகளை கூற அனுமதி
ADDED : ஜூலை 18, 2025 11:23 PM

பெங்களூரு: 'வீடு வீடாக போலீஸ்' திட்டத்தை, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று துவக்கி வைத்தார்.
பெங்களூரில் திட்டத்தை துவக்கி வைத்து, அமைச்சர் பரமேஸ்வர் பேசியதாவது:
போலீசார், மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், 'வீடு வீடாக போலீஸ்' என்ற திட்டத்தை வகுத்தோம். இத்திட்டம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
இது போன்ற திட்டம் செயல்படுத்துவது, இதுவே முதன் முறை. மக்கள், போலீசாரை தேடி வர வேண்டியது இல்லை. போலீசாரே மக்களிடம் சென்று, பிரச்னைகளை கேட்டறிவர்.
இதுவரை சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார், இனி வீடு வீடாக சென்று மக்களை சந்திப்பர். அந்தந்த போலீஸ் நிலைய போலீசார், அவரவர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் வீடுகளுக்கு செல்ல வேண்டும்.
அந்த வீட்டில் யார், யார் வசிக்கின்றனர்; புதிதாக வந்துள்ளனரா; சொந்த வீடா, வாடகைக்கு வசிக்கின்றனரா; அவர்கள் என்ன வேலை செய்கின்றனர் என்பது உட்பட, அனைத்து விபரங்களையும் கேட்டறிய வேண்டும்.
அதே போன்று வீட்டில் உள்ளவர்களுக்கு, ஏதாவது பிரச்னைகள் இருந்தால், அதை போலீசாரிடம் தெரிவிக்கலாம். வீட்டின் அருகில் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நடமாட்டம் இருந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். போலீசாரின் இத்தகைய நடவடிக்கை, மக்களை அவர்களுடன் நெருக்கமாக்கும்.
சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்தவும் உதவியாக இருக்கும். வீட்டில் வசிப்போரின் பெயர்களை போலீசார் பதிவு செய்து கொள்வர். மக்களை பற்றிய விபரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும். சமுதாயத்தில் அமைதியை காப்பாற்றுவது, குற்றங்களை கட்டுப்படுத்தும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் நோக்கில், வீடு வீடாக போலீஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீடுகளுக்கு வரும் போலீசார் கேட்கும் விபரங்களை தெரிவித்து, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.