சட்ட விரோதமாக விளம்பர போர்டுகள் வைத்தால் இரு மடங்கு அபராதம்
சட்ட விரோதமாக விளம்பர போர்டுகள் வைத்தால் இரு மடங்கு அபராதம்
ADDED : மார் 29, 2026 03:23 AM
மாநகராட்சி எல்லைக்குள் வணிக மற்றும் சுய விளம்பரங்களின் நிறுவல் வெளிப்படையாகவும், முறைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்யும் வகையில், 'கிரேட்டர் பெங்களூரு பகுதி ( விளம்பரம்) விதிகள் - 2025, கடந்த 2025 - 26ம் ஆண்டில் அமலுக்கு வந்தன.
விளம்பரதாரர்கள், பொது ஏலம் ( டெண்டர் ) வாயிலாக, வணிக விளம்பரங்களை வெளியிடுவதற்கான உரிமையை பெற்றுக் கொள்ளலாம். பொது ஏலங்களில் பங்கேற்பதற்கு, அவசியம் விளம்பர உரிமம் பெற வேண்டும். தற்போது அனுமதி பெற்றுள்ள சுய விளம்பரங்களை, வணிக விளம்பர பலகைகளாக மாற்றிக் கொள்ள ஒருமுறை அனுமதி வழங்கப்படும்
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய விளம்பர டெண்டர் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் உரிமம் கட்டணமாக 1.25 கோடி ரூபாய் வசூலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்படாத விளம்பரங்களை கட்டுப்படுத்தும் வகையில், அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரவும், டெண்டரின் போது அவர்கள் சமர்ப்பித்த தொகையை விட, இரு மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இப்புதிய விளம்பர விதிகளால், மாநகராட்சிக்கு நடப்பாண்டு, 108 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் மாநகராட்சி உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த நிலம் கையகப்படுத்துவது முக்கியமாகும். எந்த திட்டம் துவங்குவதாக இருந்தாலும், நிலம் உரிய நேரத்தில் கிடைக்கும் வகையில், நடப்பாண்டு நிலம் கையகப்படுத்த, 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
