தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம் தமிழ் கற்றோருக்கு சான்றிதழ் வழங்கல்

டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம் தமிழ் கற்றோருக்கு சான்றிதழ் வழங்கல்

டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம் தமிழ் கற்றோருக்கு சான்றிதழ் வழங்கல்


UPDATED : நவ 23, 2026 12:00 AM

ADDED : நவ 22, 2026 09:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 12:00 AM ADDED : நவ 22, 2026 09:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம் சார்பில் நடத்தப்பட்ட இணையவழி தமிழ் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. இதில், தமிழில் தேர்ச்சி பெற்ற, 250 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பெங்களூரு சி.வி.ராமன் நகரில் உள்ள டி.ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணியாற்றும் தமிழர்கள், ஆண்டுதோறும், ‘டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமம்’ நடத்துகின்றனர்.

டி.ஆர்.டி.ஓ., பொங்கல் சங்கமத்தினர், தமிழ் இணைய கல்விக்கழகத்துடன் இணைந்து, 2019லிருந்து இணையவழியில் தமிழ் கற்றுக்கொடுக்கின்றனர். தமிழ் வகுப்பை ஐந்து பகுதியாக பிரித்து கற்பிக்கின்றனர். இந்த வகுப்பில் 5 வயது முதல் யார் வேண்டுமானாலும் பங்கேற்று தமிழை கற்கலாம்.

இந்த செயல்பாடு, கர்நாடகாவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பேருதவியாக இருக்கிறது. இதுவரை, 2,000க்கும் மேற்பட்டோர் தமிழ் கற்று உள்ளனர்.

2025 – 2026 கல்வியாண்டில் தமிழ் பயின்று தேர்ச்சி பெற்ற 250 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, சி.வி.ராமன் நகரில் உள்ள டி.ஆர்.டி.ஓ., சமூக மண்டபத்தில் நடந்தது.

இதில், டி.ஆர்.டி.ஓ.,வில் பணிபுரியும் மூத்த விஞ்ஞானி டாக்டர் கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவர், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இதையடுத்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பேச்சு போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் தமிழர் வரலாறு, பண்பாடு குறித்து சிறப்பாக பேசினர். இதை பார்த்தோர் சங்கத்தினரை பாராட்டினர்.

இந்த வகுப்பில், பங்கேற்க விரும்புவோர், drdopongalsangamam@gmail என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். விழாவில் சங்க தலைவர் ரகுபதி, துணை தலைவர் தயாநிதி, செயலர் ராஜேஷ் காந்தி, துணை செயலர் சரவணகுமார், பொருளாளர் முரளி, கல்வி குழு ஒருங்கிணைப்பாளர்கள் ரகுவரன், ராஜேஸ்வரி, மாரிமுத்து, தமிழ் ஆசிரியர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us