எம்.எல்.சி., தேர்தலில் காங்கிரசுக்கு சறுக்கல் பெங்., ஆசிரியர் தொகுதியை பறிகொடுத்தது
எம்.எல்.சி., தேர்தலில் காங்கிரசுக்கு சறுக்கல் பெங்., ஆசிரியர் தொகுதியை பறிகொடுத்தது
UPDATED : அக் 28, 2026 03:35 AM
ADDED : அக் 27, 2026 11:16 PM

பெங்களூரு: எம்.எல்.சி., தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் சறுக்கலை சந்தித்துள்ளது. பெங்களூரு ஆசிரியர் தொகுதியை, ம.ஜ.த.,விடம் பறிகொடுத்துள்ளது. முதல்வர் சிவகுமாரின் ஆதரவாளரான, 5 முறை எம்.எல்.சி., புட்டண்ணா அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். ம.ஜ.த., வேட்பாளர் வெற்றி பெற்றார். பிற தொகுதிகளிலும், பா.ஜ., வெற்றி முகம் காட்டி வருகிறது.
கர்நாடக மேல்சபையில் எம்.எல்.சி.,க்களாக இருந்த கர்நாடக தென்கிழக்கு பட்டதாரி தொகுதியின் பா.ஜ.,வின் சிதானந்த் எம்.கவுடா, கர்நாடக மேற்கு பட்டதாரி தொகுதியின் பா.ஜ.,வின் சங்கனுார்; கர்நாடக வடகிழக்கு ஆசிரியர் தொகுதியின் பா.ஜ.,வின் சஷில் நமோஷி; பெங்களூரு ஆசிரியர் தொகுதியின் காங்கிரசின் புட்டண்ணா ஆகியோரின் பதவி காலம் அடுத்த மாதம் 9ம் தேதியுடன் நிறைவு பெறுகிற து.
புதிய எம்.எல்.சி.,க்களை தேர்வு செய்ய கடந்த 23 ம் தேதி தேர்தல் நடந்தது. மேற்கு பட்டதாரி, வடகிழக்கு ஆசிரியர் தொகுதிக்கு தற்போதைய எம்.எல்.சி.,க்களே மீண்டும் வேட்பாளராக பா.ஜ., களம் இறக்கியது. தென்கிழக்கு பட்டதாரி தொகுதியில் சிதானந்த் கவுடாவுக்கு பதிலாக சுரேஷ் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
ஓட்டு சீட்டு
காங்கிரஸ் வேட்பாளராக தென்கிழக்கு பட்டதாரி தொகுதிக்கு சசி ஹுலிகுண்டேமத்; மேற்கு பட்டதாரி தொகுதிக்கு மோகன் லிம்பிகே; வடகிழக்கு ஆசிரியர் தொகுதிக்கு சரணப்பா மட்டூர்; பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கு புட்டண்ணா நிறுத்தப்பட்டனர்.
இந்த தேர்தலில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பட்டதாரிகள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஓட்டு சீட்டு முறைப்படி நடக்கிறது என்பதாலும், வேட்பாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பட்டதாரிகளை சந்தித்து ஓட்டு சேகரித்தனர்.
9 சுற்றுகள்
இந்நிலையில் கடந்த 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. கர்நாடக தென்கிழக்கு பட்டதாரி தொகுதியில் 73.58; கர்நாடக மேற்கு பட்டதாரி தொகுதியில் 75.62; கர்நாடக வடகிழக்கு ஆசிரியர் தொகுதியில் 86.97; பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் 81.98 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன. தேர்தல் முடிவுகள் 27ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, நேற்று காலை பாதுகாப்பு அறைகளில் இருந்து, ஓட்டுசீட்டுகள் எடுத்து வரப்பட்டு, 14 மேஜைகளில் போட்டு எண்ணப்பட்டன. பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் காங்கிரசின் புட்டண்ணாவும், பா.ஜ., கூட்டணியில் உள்ள ம.ஜ.த., வேட்பாளர் ரங்கநாத்தும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தனர்.
மொத்தம் 9 சுற்றுகள் நடந்த ஓட்டு எண்ணிக்கையின் முடிவில், ரங்கநாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
முன்னிலை
இந்த தொகுதியில், மொத்த வாக்காளர்கள், 27,405 பேர். இதில் 22,468 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். இதில் 21,056 ஓட்டுகள் செல்லுப்படியான நிலையில், 1,857 ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டு இருந்தன. ரங்கநாத் 10,810 ஓட்டுகளும், புட்டண்ணா 9,902 ஓட்டுகளும் பெற்றனர்.
இதன்மூலம், 908 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ரங்கநாத், முதல்முறையாக எம்.எல்.சி.,யாக தேர்வாகி உள்ளார்.
ஐந்து முறை தொடர்ந்த, எம்.எல்.சி.,யாக இருந்த புட்ட ண்ணாவுக்கும், ரங்கநாத் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். புட்டண்ணா, முதல்வர் சிவகுமாரின் தீவிர ஆதரவாளர் ஆவார். தன் ஆதரவாளர் தோற்று போனது, சிவகுமாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியு ள்ளது.
அதேநேரம் ரங்கநாத்தின் வெற்றி பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தலைவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சட்டசபை தேர்தலிலும் காங்கிரசை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்புவோம் என்று சூளுரைத்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க மற்ற 3 தொகுதிகளிலும், பா.ஜ., வேட்பாளர்களை முன்னிலையில் இருப்பது தெரிந்தது. நேற்று நள்ளிரவு வரை ஓட்டு எண்ணிக்கை நடந்ததால், இன்று தான் முழுமுடிவுகள் தெரியவரும்.
